இளம்பிள்ளை, ஜூன் 17- கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சேலம் மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் செல்வம் தலைமையில் 2 ஆம் கட்டமாக இடங்கணசாலை பேரூராட்சி பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கப் பட்டது. இதில் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியான காடையாம்பட்டி, கே.கே. நகர, சித்தர்கோயில், இடங்கணசாலை உள்ளிட்ட பகுதிகளில் கிருமி நாசினி டிராக்டர் வண்டி மூலம் தெளிக்கப்பட்டது. இதில் பேரூர் நெசவாளர் அணி அமைப்பாளர் பாட்ஷா(எ) குணசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.