சேலம்:
நீட் தேர்வு காரணமாக உயிரிழந்த மேட்டூர் மாணவனின் குடும்பத்தினருக்கு இந்திய மாணவர் சங்கத்தினர் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர்.சேலம் மாவட்டம், மேட்டூரை அடுத்த கூலையூரைச் சேர்ந்த மாணவன் தனுஷ்(20) நீட் தேர்வு பயத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், மாணவர் தனுஷின் வீட்டிற்கு சென்ற இந்திய மாணவர் சங்க மாநிலச் செயலாளர் வீ.மாரியப்பன் உள்ளிட்டோர், மாணவனின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
இதுவரை, 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், இப்பிரச்சனையை ஒன்றிய அரசு முறையாக கையாள வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவனின் குடும்பத்திற்கு அரசு சார்பில் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், ஒன்றிய அரசு நீட் தேர்வை ரத்து செய்யஇந்திய மாணவர் சங்கம் சார்பில் அடுத்தகட்ட போராட்டங்களை நடத்த உள்ளதாகவும் வீ.மாரியப்பன் தெரிவித்தார்.முன்னதாக, சிபிஎம் மேட்டூர் கொளத்தூர் ஒன்றிய செயலாளர் வசந்தி,இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் பவித்ரன், நிர்வாகி பகத்சிங், கவின்ராஜ், அகில இந்திய வழக்கறிஞர் சங்க மாநிலக் குழு உறுப்பினர் வழக்கறிஞர் வெற்றிவேல் உள்ளிட்டோரும் மாணவரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரி வித்தனர்.