tamilnadu

img

சேலம்: விஜயின் பிரச்சார கூட்டத்தில் ஒருவர் உயிரிழப்பு!

சேலத்தில் இன்று நடைபெற்ற நடிகரும், த.வெ.க தலைவருமான விஜயின் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்ற சூரஜ் (37) என்பவர் உயிரிழந்துள்ளார்.
தமிழக வெற்றி கழகத்தின் சேலம் மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் மற்றும் தேர்தல் பிரச்சாரம் இன்று சீலநாயக்கன்பட்டி அடுத்த தாளமுத்து நடராஜன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்டு நிர்வாகிகள் மத்தியில் பேசினார். இக்கூட்டத்தில் தவெக-வைச் சேர்ந்த 4,998 நிர்வாகிகள் மட்டுமே கலந்துகொள்ள போலீசார் அனுமதி அளித்திருந்தனர். இந்த நிலையில், பிரச்சார கூட்டத்தில் பங்கேற்ற வெள்ளிப் பட்டறை தொழிலாளி சூரஜ் (37) என்பவர் உயிரிழந்துள்ளார்.
3 மணிநேரம் வெயிலில் நின்றிருந்ததால் மயக்கமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.