சேலம்,மே19- காவேரி சரபங்கா நீரேற்று திட்டத்தை ஓடை வழியாக கொண்டு செல்ல வலியுறுத்தி திட்ட அதிகாரியிடம் தமிழ் நாடு விவசாயிகள் சங்கம் சார்ப்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. சேலம் மாவட்டம், கெங்கணாபுரம் ஒன்றியம் செக்குமேடு பகுதியில் விவசாயிகளின் அனுமதி இல்லாமல் காவேரி சரபங்கா நீரேற்று திட்டத்திற்கு நில அளவை செய்ய வந்த அதிகாரிகளை விவசாயிகள் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். அதன் பிறகு திட்ட அதிகாரி வேதநாராயணனை சந்தித்த விவசாய சங்கத்தினர் நீரேற்று திட்டத்தை விவசாய நிலங்கள் பாதிக் காமல் ஓடை வழியாக செயல்படுத்த வேண் டும் என்று கோரிக்கை மனு அளித்தனர். இதையடுத்து அதிகாரியும் திட்டத்தை ஓடை வழியாக கொண்டு செல்ல ஆய்வு செய்வதாக் கூறி மனுவை பெற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஏ.ராமமூர்த்தி, ஒன்றிய செயலாளர் வெங்க டேஷ், ஒன்றிய பொருளாளர் பழனி, உதவி செயலாளர் செம்மலையப்பன், ஐடிபிஎல் விவசாய சங்க பொறுப்பாளர் ஏழுமலை ஆகியோர் கலந்து கொண்டனர்.