சேலம், டிச.24 - குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி சேலம், தருமபுரி மாவட்டத்தில் இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய பாஜக அரசு நிறை வேற்றி உள்ள குடியுரிமை சட் டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஐக்கிய ஜமாஅத் கூட்ட மைப்பினர் சேலம் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டமைப்பின் தலைவர் எஸ்.ஆர்.அன்வர் தலைமை தாங்கினார். இதில் திமுக மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் எம்எல்ஏ, சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயபிரகாஷ், அர்த்தனாரி, விடுதலை சிறுத் தைகள் கட்சியின் மாவட்ட செய லாளர் ஜெயச்சந்திரன், பொரு ளாளர் காஜாமைதீன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் தலை வர்கள் பங்கேற்றனர். முன்னதாக, ஆர்ப்பாட்டத்திற்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வர்கள் ஒன்று சேர்வதை அறிந்த காவல் துறையினர் மாநகரத்தின் பல் வேறு பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தி இருந்தனர். மேலும் வஜ்ரா வாகனம் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடு களையும் செய்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தருமபுரி
தேசிய குடியுரிமை சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி திங்க ளன்று அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பினர் தருமபுரியில் அமைதி பேரணி மற்றும் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனா். ஆர்ப்பாட்டத்திற்கு கூட்ட மைப்பு தலைவர் அப்துல்காதர் தலைமை வகித்தார். கூட்டமைப்பு தலைவர்கள் இமாம்,சதூத்தீன் பாகவி,சாதீக்,சாபீப்அகமது ஆகி யோர் பேசினர். முன்னதாக, தருமபுரி வேல்பால் டிப்போ அருகில் துவங்கிய பேரணி முக்கிய கடைவீதிவழியாக சென்று தருமபுரி தொலைபேசி நிலையம் முன்பு வந்தடைந்து. இதில் 5 ஆயிரத் திற்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டனா்.