இளம்பிள்ளை, ஜூலை 30- இளம்பிள்ளையில் கோவில் வளாகத்தில் காய் கறிக் கடைகள் வைக்க கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. சேலம் மாவட்டம், இளம் பிள்ளை பேரூராட்சிக்கு உட்பட்ட சந்தப்பேட்டை பகுதியில் இந்து அறநிலை யத்துறைக்கு சம்பந்தப் பட்ட மாரியம்மன், காளியம் மன் கோயில்கள் உள்ளன. இதன் அருகில் வாரந்தோ றும் வெள்ளியன்று சந்தை நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமா னதால் கடந்த நான்கு மாதங் களாக வாரச்சந்தை நடை பெறவில்லை.
ஆனால், அவ் விடத்தில் தினந்தோறும் காய்கறிகள் உட்பட பல் வேறு வகையான வியாபாரி கள் கடை வைத்து விற்பனை செய்து வந்தனர். ஆனால், இப்பகுதியில் முறையாக தனிமனித இடை வெளி கடைப்பிடிக்காமல் இருப்பதால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கோவில் நிர்வாகத்தின் சார்பில் இவ்விடத்தில் யாரும் காய் கறி மற்றும் இதர கடைகள் அமைக்கக் கூடாது எனவும், மறு உத்தரவு வரும்வரை யாரேனும் கடைகள் வைக்க நேரிட்டால் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்ப டும் என அறிவிப்பு பலகை கள் வைக்கப்பட்டுள்ளது.