சேலம், செப்.28- சேலம் மாவட்டம், இளம்பிள்ளை பகுதியில் சங்ககிரி வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் இல வச சட்ட ஆலோசனை மற் றும் விழிப்புணர்வு முகாம் சனியன்று நடைபெற்றது. இந்நிகழ்விற்கு சங்க கிரி சார்பு நீதிமன்றம் நீதி பதி மேகலா மைதிலி தலைமை தாங்கினார். மாவட்ட உரிமையியல் நீதிபதி பாக்கியம், குற்ற வியல் நீதித்துறை நடுவர் உமாமகேஸ்வரி, வழக் கறிஞர்கள் செல்லப்பன், குமார், குமரேஷ், உள் ளிட்டோர் கலந்து கொண்டு சட்ட ஆலோசனைகளை வழங்கினார். இம்முகாமில் பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித் தொகை, விபத்து நிவாரணம் உள் ளிட்ட மனுக்களும் பெறற் பட்டன.