சேலம்:
சேலம் செவ்வாய்ப் பேட்டை பகுதியை சேர்ந்த சுரேஷ், நந்தினி தம்பதியர் களின் நான்கு வயது குழந்தைதேஜஸ். நினைவாற்றல் அதிகம் உள்ளதால், சொல்லிக்கொடுக்கும் அனைத்தையும் மறக்காமல் நினைவு வைத்திருக்கும் ஆற்றல் பெற்றுள்ளார். இரண்டரை வயதிலேயே 82 நாடுகளில் தேசியக் கொடிகளை பார்த்து நாடுகளின் பெயரைசொல்லி உலக சாதனை படைத்துள்ளார். இதை தொடர்ந்து 102 பிரபல தலைவர்களின் புகைப்படத்தை பார்த்து அவர்களின் பெயர் களை சொல்லியும்,ஒரு நிமிடத்தில் 51 வெளிநாடு மீன்களின் பெயர்களையும் கூறி அனைவரையும் வியக்கவைத்து மற்றொரு சாதனை படைத்தார்.இந்த இரண்டு சாதனை களையும் பாராட்டி மதுரையில் உள்ள உலகத் தமிழ்ச்சங்கத்தில் தேஜஸ்க்கு டாக்டர் பட்டம் வழங்கியுள்ளனர். இதுவரை 16 பதக்கங்கள், உலகச் சாதனை சான்றிதழ்பலவும் பெற்று அனைவரை யும் வியக்க வைத்து வருகிறார்.