நீலகிரி மாவட்டத்தில் ஹோம்மேட் சாக்லேட் தயாரித்த வியாபாரிக்கு அமெரிக்க பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது.
நீலகிரி மாவட்டம் உதகையில் தயாரிக்கப்படும் ஹோம்மேட் சாக்லேட் பிரபலமானது. வெளிமாநிலங்கள், பிற மாவட்டங்களில் இருந்து சுற்றுலா வருகிறவர்கள் வரிக்கி, பிஸ்கட் சாக்லேட் போன்றவற்றை விரும்பி வாங்கி செல்கின்றனர். சாக்லேட் உற்பத்தி செய்பவர்கள் ஊரடங்கு தளர்வுக்கு பின் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர்.இந்த நிலை யில் உதகையில் ஹோம்மேட் சாக்லேட் தயாரித்து வரும் பட்டாபி ராமனுக்கு அமெரிக்கா பல்கலைக்கழ கம் டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்து உள்ளது. சமீபத்தில் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் அவருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில்,, உதகையில் தயாரிக்கப்படும் ஹோம்மேட் சாக்லேட் துபாய் போன்ற வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. துபாய் சூப்பர் மார்க்கெட்டில் வைக்கப்பட்டு இருந்த உதகை சாக்லேட்டை சாப்பிட்டு பார்த்த அமெரிக்கா பல்கலைக்கழகத்தினர் ஆய்வு செய்து நன்றாக இருக்கிறது என்று என்னிடம் தொடர்பு கொண்டு எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது என்று கேட்டறிந்தனர். நான் இதுகுறித்து விளக்கினேன். இதற்காக டாக்டர் பட்டம் வழங்கி உள்ளனர். இது பெருமையாக உள்ளது. நான் 26 ஆண்டுகளுக்கு முன் சாக்லேட் உற்பத்தியை சிறு தொழிலாக துவங்கினேன்.
இதில் கடுமையாக உழைத்து இரவு பகல் பாராமல் தொடர்ந்து எங்கள் நிறுவனத்தில் இருந்து வாடிக்கையாளருக்கு உலகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறேன். தற்போது நிறுவனமாக உயர்ந்துள்ளதும், பட்டம் கிடைத்ததும் எனது உழைப்பிற்கு கிடைத்த வெற்றி என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.மேலும்தமிழக அரசு புவிசார் குறியீடு வழங்கி, சாக்லேட் உற்பத்திதொழிலை பாதுகாக்க வேண்டும் என்று தெரிவித்தார்.