tamilnadu

img

சேலம் உருக்காலையை தனியார்மயமாக்காதே பாஜக தொழிற்சங்கம் கண்டனம்

சேலம், செப்.4- மத்திய பாஜக அரசு, சேலம் உருக்காலையை தனியாருக்கு விற்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் உருக்காலையில் தொடர் காத்திருப்பு போராட் டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலா ளர்களுக்கு பாஜக தொழிற்சங் கமான பிஎம்எஸ் தொழிற்சங் கத்தின் தேசிய ஒருங்கிணைப் புச் செயலாளர் புதனன்று ஆதரவு தெரிவித்தும், வாழ்த்துரை வழங் கினார்.   சேலம் உருக்காலை உள்ளிட்ட மேலும் 3 இரும்பாலை மற்றும் உருக்காலைகளை மத்திய பாஜக மோடி அரசு தனியாருக்கு விற்கும் முடிவு எடுத்துள்ளது. இதற்காக உலகளாவிய ஒப் பந்தம் கோரியுள்ளது. இந்நிலை யில் சேலம் உருக்காலை தொழி லாளர்கள் தனியார்மயமாக்கு வதை எதிர்த்து கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் 31 நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்தும், போராட்டத்தை வாழ்த்தி வரு கின்றனர். இதன் ஒரு பகுதியாக உருக் காலை தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரி வித்தும், பாஜக அரசின் தனியார் மயக் கொள்கைக்கு கண்டனம் தெரிவித்தும் பாஜகவின் தொழிற் சங்க அமைப்பான பாரதிய மஸ் தூர் சங்கம் சார்பில் தேசிய ஒருங் கிணைப்பு செயலாளர்  சுரேந்திரன் வாழ்த்துரை வழங்கி னார். அவருடன் அந்த அமைப் பின் நிர்வாகிகள்  பாண்டி, துரை ராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.  பாஜக அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்தும், தனியார்மயக் கொள்கையை கண்டித்து பாஜகவின் அங்கீகரிக் கப்பட்ட தொழிற்சங்கமான பிஎம்எஸ் எதிர்ப்பு தெரிவித்துள் ளது. இச்செயல்  பாஜக அரசின் தனியார்மயக் கொள்கைக்கு எதிராக  போராடும் அளவிற்கு சென்று விட்டதாக  தொழிற் சங்கத்தினர் தெரிவித்தனர். இந்த காத்திருப்பு போராட்டத் தில்  அனைத்து தொழிற்சங்க நிர் வாகிகளும், தொழிலாளர்களும்  பங்கேற்றனர்.