மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை கண்டித்தும், அதை அமல்படுத்தக் கூடாது என வலியுறுத்தியும் பல்வேறு அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.குணசேகரன், சிபிஐ மாவட்ட செயலாளர் மோகன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநகர பொருளாளர் காஜாமைதீன், திராவிடர் விடுதலை கழக நிர்வாகி டேவிட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மத்திய அரசிற்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர்.