சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் நடந்த தேர்வில், சாதி ரீதியான கேள்வி கேட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று பெரியார் பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் இயங்கக்கூடிய கல்லூரிகளில் வரலாற்றுத்துறை இளங்கலை இரண்டாமாண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் இரண்டாம் தேர்வு நடைப்பெற்று முடிந்தது. இத்தேர்வில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட வினாத்தாளில் 11-வது கேள்வியாக, `தமிழ்நாட்டில் உள்ள தாழ்த்தப்பட்ட சாதி எது?’ என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாணவர் ஒருவர் சமூக வலைத்தலங்களில் கடுமையாக விமர்சித்து பதிவிட்டுள்ளார். இச்செய்தி சமூக வலைத்தலங்களில் வைரலாக பரவ தொடங்கியுள்ளது. பல்கலைக்கழகத்தின் இந்த நடைமுறைக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.