சேலம், செப். 19- இறுதியாண்டில் கடைசிப் பருவத்தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களின் தேர்ச்சியை உறுதிபடுத்திட, நடைமுறை சிர மங்களை கருத்தில் கொண்டு மின்னஞ்சல் மற்றும் அஞ்சல் அனுப்புவதற்கான கால அவகா சத்தை நீடித்து வழங்கக்கோரி சேலம் பெரியார் பல்கலைக் கழக துணைவேந்தரிடம் இந்திய மாண வர் சங்கத்தினர் மனு அளித்தனர்.
இதுதொடர்பாக, இந்திய மா ணவர் சங்கத்தின் மாநிலத் தலை வர் ஏ.டி.கண்ணன், மாவட்டச் செயலாளர் ஆர்.கவின்ராஜ், நிர் வாகிகள் தே.சரவணன், சி.சதீஸ் குமார், கே.இளவரசன் ஆகியோர் சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தரிடம் அளித்த மனு வில் கூறியிருப்பதாவது, உலகி லேயே கொரோனா வைரஸ் அதி கம் பாதிக்கப்படும் நாடாக இந் தியா மாறியுள்ள நிலையில், பல் கலைக்கழக மானியக்குழுவும், மத் திய அரசும் இறுதியாண்டு மாண வர்களுக்கான இறுதி பருவத் தேர்வை நடத்தியே ஆக வேண்டும் என கூறுவது மாணவர்கள் மற் றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள் ளது.
இச்சூழலில், சேலம் பெரியார் பல்கலைக்கழகம் மேற்கண்ட தேர்வை நடத்துவதற்கான கேள் வித்தாள்களை காலை 9.45 மணிக்கு துறைத்தலைவர்களுக்கு அனுப்பி வைக்கும். அதை ஆசிரி யர்கள் மாணவர்களுக்கு மின்னஞ் சல் மற்றும் வாட்சப் மூலமாக அனுப்பி வைக்க வேண்டும். இந்த கேள்வித்தாள்களை பதிவிறக்கம் செய்து மாணவர்கள் தேர்வு எழுத வேண்டும். தேர்வு எழுதி முடிக்கும் மாணவர்கள் பிற்பகல் 2 மணிக் குள் மின்னஞ்சலில் பதிவேற்றம் செய்து அனுப்பி வைக்க வேண் டும். மேலும், அசல் விடைத்தாள் களை உடனடியாக பதிவு அஞ்சல் மூலமாகவும் அனுப்பி வைக்க வேண்டுமென சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
ஆனால், கிராமப்புற மற்றும் மலைப்பகுதிகளிலிருந்து சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களுக்கு போதிய இணைய வசதி கிடைப்பதிலும், வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்வதிலும், விடைத்தாள்களை பதிவேற்றம் செய்வதிலும், தங்கள் இருப்பிடத்திலிருந்து அஞ்சல் நிலையம் சென்று பதிவு அஞ்சல் அனுப்புவதிலும் மிகப்பெரிய நடைமுறை சிரமம் உள்ளது. எனவே, ஒவ்வொரு தேர்வுக்கும் இடையில் குறைந்தது இரண்டு நாட்கள் கால அவகாசம் வழங்க வேண்டும்.
தேர்வுக்கான வினாத் தாளை காலை 9 மணிக்கே மாண வர்களுக்கு கிடைக்கும் வகையில் மின்னஞ்சல் அல்லது வாட்ஸ்அப் மூலம் அனுப்பி வைக்க வேண்டு மென்று கேட்டுக்கொள்கிறோம். இதேபோல், விடைத்தாள்களை மின்னஞ்சல் மூலம் பதிவேற்றம் செய்வதற்கு இரவு 8 மணி வரை கால அவகாசம் நீடித்து வழங்க வேண்டும். மேலும் ஏற்கனவே மாணவழ் கள் தேர்வுக்கான கட்டணத்தை செலுத்தியுள்ள நிலையில் தற் போது மாணவர்களே இணையம், பதிவு அஞ்சல் மூலம் விடைதாள் உள்ளிட்டவற்றிக்கு செலவு செய்ய வேண்டியுள்ளதால் தேர் வுக்காக கட்டணத்தை மாணவர்க ளுக்கு திருப்பிக் கொடுக்க வேண் டும். இவ்வாறு அம்மனுவில் வலி யுறுத்தப்பட்டுள்ளது.