tamilnadu

img

பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் போராட்ட அறிவிப்பு

முறைகேடுகளுக்கு துணைபோகும் துணைவேந்தர்

சேலம், செப்.17- முறைகேடுகளுக்கு துணைபோகும் துணைவேந்தர் ராஜினாமா செய்யக்கோரி தொடர் போராட்டங்களில் ஈடுபட உள்ள தாக  சேலம் பெரியார் பல்கலைக்கழக தொழி லாளர் சங்கம் மற்றும் அனைத்து பல் கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் அறிவித் துள்ளது. இதுதொடர்பாக, சேலம் பெரியார் பல் கலைக்கழகத்தில் பணியாற்றும் பல்கலைக் கழக தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செய லாளர் சக்திவேல்  செவ்வாயன்று செய்தியா ளர்கள் சந்திப்பில் கூறுகையில், கடந்த 9 ஆண்டுகளுக்கும் மேலாக பல்கலைக்கழ கத்தில் பணியாற்றி வரும் தற்காலிக பணி யாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மூன்றாண்டுகளுக்கு மேல் பணி புரியும் ஊழியர்களை வேறு இடத்திற்கு  மாற்றம் செய்ய வேண்டும். பல்கலைக்கழ கத்தில் நடைபெறும் ஊழல் முறைகேடு களை களைய துணைவேந்தர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி பல்கலைக்கழக துணைவேந்தரிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவ்வாறு துணைவேந்தர் எந்த நடவ டிக்கையும் எடுக்காததால் போராட்டத் திற்கு தள்ளப்பட்டு உள்ளோம். ஆகவே, நாளை முதல் (புதன்கிழமை) முதல் கட்ட மாக கோரிக்கை அட்டை அணிந்து பணி யாற்ற உள்ளோம். அடுத்த நாள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்ற உள்ளதுடன், எதிர்வரும் 23 ஆம் தேதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவும் முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அனைத்து பல் கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில தலைவர் பசுபதி செய்தியாளர்களிடம் கூறு கையில், பெரியார் பல்கலைக்கழக ஊழி யர்களின் போராட்டத்திற்கு அனைத்து பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் ஆதரவு அளிக்கிறது. மேலும், நிர்வாகத் தின் சர்வாதிகாரியாக துணைவேந்தர் செயல்படுவதுடன், பல்கலைக்கழக கோப்பு களை தொடர்புடையவர்களே திருடி உள்ள தாகவும் அவர் குற்றம்சாட்டினார்.  எனவே, துணைவேந்தர் ராஜினாமா செய்ய வேண் டும். இந்த விவகாரத்தில் தமிழக ஆளுநர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் அனைத்து சங்கங்களும் ஒன்றிணைந்து மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அவர் தெரிவித்தார்.