ஆத்தூர், ஆக 14 - மலைவாழ் மாணவர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்காததை கண்டித்து ஆத்தூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் காத்திருப்பு போராட்டம் புதனன்று நடைபெற்றது. சேலம் மாவட்டம், ஆத்தூர் தாலு காவில் உள்ள கல்லுக்கட்டு, வானா புரம் பகுதியில் வாழும் மலைவாழ் மக்களின் குழந்தைகளுக்கு சாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்து ஆறு மாதமாகியும் சாதி சான்றிதழ் வழங்காமல் அதிகாரி கள் அலட்சிய போக்கை கடை பிடித்து வந்தனர். மேலும் ராம மூர்த்தி நகர், வசந்தபுரம், காந்தி புரம், மேல் தொம்பை ஆகிய பகுதி யில் குடியிருக்கும் மக்களுக்கு 2006 ஆம் ஆண்டு வன உரிமை பாது காப்பு சட்டத்தின்படி குடிமனை மற்றும் நிலப்பட்டா வழங்கப்பட வில்லை. இந்த கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு மலைவாழ் மக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் ஆத்தூர் கோட் டாட்சியர் அலுவலகத்தை தாலுகா செயலாளர் எ.முருகேசன் தலை மையில் முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சிபிஎம் மாவட்ட செய லாளர் பி.ராமமூர்த்தி, கெங்கவல்லி தாலுகா செயலாளர் ஜோதிக் குமார், தாலுகா குழு உறுப்பினர்கள் உள்ளிட்டு திரளானோர் ஆர்ப்பாட் டத்தில் பங்கேற்றனர். இதையடுத்து கோரிக்கை மனு அளிப்பதற்காக சென்றனர். அப் போது வருவாய்த்துறை அதிகாரி கள் யாரும் சந்திக்காத நிலையில், காத்திருப்பு போராட்டத்தில் ஈடு பட்டார்கள். அதை தொடர்ந்து 2 மணி நேரத்திற்கும் மேலாக காத்தி ருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர் களை காவல்துறையினர் சமா தனம் செய்து சம்பந்தப்பட்ட அதி காரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக் கப்படும் என உறுதி அளித்தனர். மேலும் நாற்பதுக்கும் மேற்பட்டவர் களுக்கு சாதிச் சான்றிதழ் வழங்கப் பட்டது. இதேபோல் ராமமூர்த்தி நகர் பகுதி மக்களுக்கு கொடுத்த பட்டாவை வருவாய்த்துறை கணக்கில் ஏற்றப்பட்டுள்ளது.