ஏற்காட்டில் தன்னார்வலர்கள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து ரத்த தான முகாம் நடத்தினர். ஏற்காடு வட்டார மருத்துவ அலுவலர் தாம்சன் முகாமை துவக்கி வைத்தார். இம்முகாமில் ஏற்காடு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ரத்த தானம் வழங்கினர். இந்த முகாமிற்கான ஏற்பாட்டை சுகாதார மேற்பார்வையாளர் செல்வக்குமார், சுகாதார ஆய்வாளர்கள், தன்னார்வலர்கள் ஆகியோர் செய்தனர்.