ஏற்காடு, ஜன. 21- சேலம் மாவட்டம், ஏற்காட்டில் வருவாய்துறை சார்பில், கள்ளச்சாரயம் மற்றும் மதுபானம் உட் கொள்வதால் ஏற்படும் தீமைகள் குறித்து கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட் டது.இதில், தப்பாட்டம், ஒயிலாட்டம், கரகாட் டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மேலும், இதுகுறித்து கோட்ட கலால் கூடுதல் அலு வலர் செல்வி கூறியதாவது: மெத்தனால் என்பது தொழிற்சாலை தேவைக் காக தயாரிக்கப்படும் நச்சுப்பொருள். இதை தவறுத லாக கள்ளச்சாராயத்தில் சேர்க்கப்படுவதால் அருந்துபவர்களின் கண்பார்வை இழக்க நேரிடும். உடல் உறுப்புகள் செயலிழக்க கூடும். கள்ளச்சாராயம் விற்பவர்கள் சமூக விரோதிகள், அவர்கள் சமூகத்தால் புறக்கணிக்கப்படுவார் கள். இவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுகின்றனர். எனவே, கள்ளச்சாராயம் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் என கூறினார். இந்நிகழ்ச்சியில், ஏற்ககாடு காவல் உதவி ஆய் வாளர் ரகு, ஏற்காடு டவுன் வருவாய் ஆய்வாளர் பெரி யசாமி, வி.ஏ.ஓ. பாஸ்கர் ஆனந்த் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.