சேலம், ஆக 1- சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவு தலைத் தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகத்தால் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட் டுள்ளது. இந்நிலையில் எதிர்வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதியன்று ஆடிப் பெருக்கு திருவிழா நடைபெறவுள்ள தால் பொதுமக்கள் தங்களது குடும்பத்தினருடன் காவேரி கரையோரப் பகுதிகளில் அதிகளவில் கூடுவதால் நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சேலம் மாவட்டத்திற்குட் பட்ட காவேரி கரையோரப் பகுதிகள் மற்றும் இதர நீர் நிலைப் பகுதிகளில் பொது மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்படுகிறது. இத் தடை உத்தரவினை மீறுப வர்கள் மீது அரசு விதிகளின் படி தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் சி.அ. ராமன் தெரிவித்தார்.