சேலம், ஜூலை 10- நூறு நாள் வேலை திட்டத்தில் வேலை அட்டை பெற்றுள்ள தொழிலாளர்கள் அனைவருக்கும் சட்டப்படி வேலை வழங்கிட வேண் டும் என வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் காமலாபுரம் ஊராட்சி அலு வலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் மாவட்டம், ஓமலூர் காம லாபுரம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை அட்டை பெற் றுள்ள தொழிலாளர்கள் அவர்கள் கூறும் நாட்களில் சட்டப்படி வேலை வழங்க ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்கள் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என வலியு றுத்தி சங்கத்தின் வட்ட உதவித் தலை வர் என். ஈஸ்வரன் தலைமையில் விவ சாய தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கீழ கத்தி, கல் கோடி காட்டு பகுதி மக்களுக்கு மயானம் வசதி செய்து தர வேண்டும். காமலாபுரம் ஊராட்சியில் உள்ள அனைத்து பகு தியிலும் சாக்கடைகளை சுத்தம் செய்ய வேண்டும். காமலாபுரம் அதற்கு உட்பட்ட இரண்டு பாசன ஏரிகள் மற்றும் கிளை வாய்க்கால் களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆர்சி செட்டிப்பட்டியில் உள்ள ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் வர நடவடிக்கை எடுக்க வேண்டும். நூறு நாள் வேலைத்திட்டத்தில் துப்பு ரவுப் பணியில் ஈடுபடும் தொழிலா ளர்களுக்கு முழு சம்பளத்தை வழங் கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர். முன்னதாக, ஆர்ப்பாட்டத்திற்கு எம்.கஸ்பா,சந்திரா ஆகியோர் முன்னிலை வகித்தனர் போராட் டத்தை மாநில உதவித் தலைவர் சி. துரைசாமி துவக்கி வைத்தார். மாவட் டத் தலைவர் வி.தங்கவேல், வட்டத் தலைவர் எம்.சின்ராஜ், விவசாய சங்க மாவட்ட உதவித்தலைவர் பி.அரியா கவுண்டர், நிர்வாகிகள் ஏ.கோவிந்தன், வி.தங்கவேல், கே.கண்ணன், கே. சிவமலை, பி.சசிகலா ஆகியோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தை விவ சாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஜி. கணபதி முடித்து வைத்தார். இதில் ஏராளமான விவசாய தொழிலாளர்கள் பங் கேற்றனர்.