நாகர்கோவில், மே13- கொரோனா கால நிவாரணமாக ஒரு குடும்பத்துக்கு 7500 ரூபாய் வீதம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் குமரி மாவட்டம் முழுவதும் உள்ள ஊராட்சி அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தலக்குளம் ஊராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகி சிவானந்தம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மலைவிளை பாசி பேசினார். மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை அட்டை பெற்றுள்ள அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும், ஊரக வேலைவாய்ப்பு திட்டத் தொழிலா ளர்களுக்கு தினக்கூலி 256 ரூபாயை குறைக்காமல் வழங்க வேண்டும், கோவிட் 19 தடுப்பு நடவடிக்கை முடியும் வரை சம்ப ளத்தை வங்கியில் போடாமல் அந்தந்த ஊராட்சி செயலாளர் மூலம் தினமும் தொழி லாளர்கள் கையிலேயே வழங்க நட வடிக்கை எடுக்க வேண்டும், 100 நாள் வேலை வாய்ப்பு திட்ட தொழிலாளர்களுக்கு முகக்கவ சம், கிருமிநாசினி உள்ளிட்ட பாதுகாப்பு உப கரணங்களை அரசே வழங்க வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் நிர்வாகி விஜயகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.