tamilnadu

img

கொரோனா நிவாரணமாக மாதம் ரூ.7500: விவசாய தொழிலாளர்கள் கோரிக்கை

நாகர்கோவில், மே 29- முதலமைச்சர் உழவு பாதுகாப்பு திட்டத்தில்  உறுப்பினர்களாக உள்ள அனைவருக்கும் கொரோனா நிவாரண நிதியாக  மாதம் ரூ.7500/- வழங்கிட கேட்டு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் வியாழனன்று மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரேவிடம் மனு அளிக்கப்பட்டது. அதன் விபரம் வருமாறு: முதலமைச்சா் உழவா் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் சிறுகுறு விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளா்களை உறுப்பினா்களாக  அரசு  பதிவு செய்து சமூக பாதுகாப்பு திட்டம் ஒன்று செயல்படுத்தபடுகிறது.  தமிழ்நாட்டில் மொத்தம் ஒரு கோடி குடும்பங்கள் உறுப்பினர்களாக சோ்க்கப்பட்டுள் ளன. குமரி மாவட்டத்தில் ஒரு லட்சம் பயனா ளிகளும் மூன்று லட்சம் வாரிசுதாரா்களும் சோ்க்கப்பட்டுள்ளனர். கோவிட் 19 தொற்று பாதிப்பில் எந்த உதவிகளும் அவா்களுக்கு அரசு வழங்கவில்லை. எனவே அவர்களுக்கு தமிழக அரசு மாதம் 7500 ரூபாய் நிவாரணம் வழங்குவதுடன், அவர்கள் வாங்கியுள்ள விவ சாய கடன்களை ரத்து செய்ய  நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.  இந்த மனுவை மாவட்டத் தலைவர் என்.எஸ். கண்ணன், மாவட்டச் செயலாளர் மலைவிளை பாசி உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கி னர்.