tamilnadu

img

சேலம் - சென்னை எட்டு வழி சாலை திட்டத்தை கைவிடுக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மனு

சேலம், ஜூன் 24- சேலம் - சென்னை எட்டு வழிச் சாலை திட்டத்தை கைவிட வலியு றுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங் கத்தினர் சேலம் மாவட்ட ஆட்சியரி டம் மனு அளித்தனர்.

சேலம் - சென்னை எட்டு வழிச் சாலை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் விண்ணப்பம் தாக் கல் செய்துள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து சேலத்தில் இத்திட்டத்தால் பாதிக் கப்படும் விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் சேலம் - சென்னை எட்டு வழி சாலை திட்டத்தை கைவிட வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் சேலம் மாவட்ட ஆட்சி யரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.  

மேலும், காவிரி சரபங்கா நீரேற்று திட்டத்தை விவசாய நிலம் வழியே கொண்டு செல்வதை கைவிட்டு நீர்வழிப் பாதை வழியே கொண்டு செல்ல வேண்டும். ஐடிபிஎல் பெட்ரோ லிய குழாய்களை விவசாய நிலம் வழியே கொண்டு செல்லாமல் நெடுஞ்சாலைகள் வழியே கொண்டு செல்ல வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

முன்னதாக, இம்மனுவினை  விவ சாயிகள் சங்க மாவட்ட செயலாளர் எ.ராமமூர்த்தி, மாவட்ட பொருளாளர் அன்பழகன், மாவட்ட துணைத்தலை வர் பி. தங்கவேலு, அரியா கவுண்டர், நிர்வாகிகள் மணிமுத்து, அன்பு உள் ளிட்ட பலர் பங்கேற்று அளித்த னர்.