tamilnadu

img

எடப்பாடியில் 150 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

 சேலம், ஜூன் 20 - எடப்பாடி பகுதியில் தடை செய்யப்பட்ட 150 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை நகராட்சி அதிகாரிகள் பறி முதல் செய்தனர். தமிழக அரசு ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் சேலம் எடப்பாடி பகுதியில் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து நகராட்சி அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இதில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய கடை உரிமையாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர். இதன்பின் புதன் கிழமை வாரச்சந்தை என்பதால் சந்தைகளில் எடப்பாடி நகராட்சி அதிகாரிகள், சுகாதார அலுவலர்கள் பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டில் உள்ளதா என ஆய்வு செய்தனர்.  அப்போது தடை செய்யப்பட்ட 150 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.