இராமநாதபுரம், மே 20- தமிழக முதல்வருக்கு நவாஸ்கனி எம்பி விடுத்துள்ள கோரிக்கை வருமாறு: ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட திலிருந்து புலம் பெயர் தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருவதை யும், சொந்த ஊர்களுக்குத் திரும்ப போக்குவரத்து வசதி யின்றி பலரும் கால்நடையாக செல்வதையும் பார்க்க முடி கிறது. இந்த நெருக்கடியான சூழ்நிலையில் புலம்பெயர் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறார் கள். அவர்களை மனித நேயத்தோடு அணுக வேண்டியது நம்முடைய கடமை. மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள குறிப்பில், தேவைக்கேற்ப சிறப்பு ரயில்களை மாநில அரசு கள் பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்திருக்கும் நிலை யில், தமிழகத்திலிருந்து வெளி மாநிலங்களுக்கு செல்ல விருக்கும் புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த மாநிலங்க ளுக்கு அனுப்ப, தமிழக அரசு அவர்களின் எண்ணிக்கைக் கேற்ப கூடுதல் ரயில்களை மத்திய அரசை கேட்டுப் பெற்று இயக்கிட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். அதே போல நம்முடைய மாநிலத்தைச் சார்ந்த தொழி லாளர்கள் பல்வேறு மாநிலங்களில் சிக்கிக் கொண்டி ருக்கிறார்கள். அந்தந்த மாநில அரசுகளை தொடர்பு கொண்டு அவர்களை நம்முடைய மாநிலத்திற்கு பாது காப்பாக அழைத்துவர நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.