tamilnadu

ஜூன் 1 முதல் மீன்பிடிக்கச் செல்லலாம் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தகவல்

இராமநாதபுரம், மே 27- கொரோனா நோய்த்தொற்று  பரவலைகட்டுப்படுத்திடும் பொருட்டு மொத்தம் 4 கட் டங்களாக 31.05.2020 வரை மொத்தம் 68 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப் பிக்கப்பட்டு அமலில் உள்ளது. இதனிடையே, இந்திய அரசின் மீன்வ ளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறையின் 20.03.2020 நாளிட்ட ஆணையில் இந்தியாவின் கிழக்குக் கடற்கரையில் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14  ஆம் தேதி வரையான 61  நாட்களுக்கு மீன்பிடிக்க தடைவிதித்து ஆணை யிடப்பட்டது. மேற்படி  ஊரடங்கு காலத்தில் தமி ழ்நாடு மீனவர்களின் வாழ்வா தாரம் பாதிக்கப்படுகிறது என்ற தமிழக அரசின் கோ ரிக்கையை ஏற்று, இந்திய அரசின்மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை 25.05.2020 நாளிட்ட ஆணையில் தற்போது அமல்படுத்த ப்படும் ஊரடங்கு காலத்தி னை கருத்தில்கொண்டு, இந்தியாவின் கிழக்கு கட ற்கரை பகுதியில் ஏப்ரல் 15 முதல் மே 31 ஆம்  தேதி வரையான 47 நாட்க ளுக்கு மட்டும் மீன்பிடித்  தடைக் காலம் அமல்ப டுத்தப்படும் என்று கூறப் பட்டுள்ளது.  

இதன்படி இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள விசைப்படகுகளுக்கு 61  நாட்களிலிருந்து 47 நாட்க ளாக மீன்பிடி தடைக்காலம் குறைக்கப்பட்டதன் காரண மாக மீனவர்கள்ஜூன் 1 ஆம் தேதி முதல் மீன்பி டிக்கச் செல்லலாம். இதன் மூலம் தமிழ்நாட்டின் விசைப் படகு உரிமையாளர்களும் மீன்பிடி தொழிலை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான மீன்பிடி தொழிலாளர்களும், மீன்பிடி  தொழிலை சார்ந்துள்ளவர்க ளும் பயன்பெறுவார்கள். மேற்கண்ட தகவலை மா வட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.