tamilnadu

img

கும்பல் படுகொலையை தடுக்க தனிச் சட்டம்!

ஜெய்ப்பூர்:
கும்பல் படுகொலைகளுக்கு எதிராக, ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டமசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.ராஜஸ்தான் மாநிலத்தில், பாஜக ட்சி நடைப்பெற்ற போது, பசுக்களைப் பாதுகாக்கிறோம் என்ற பெயரில், இஸ்லாமியர்கள் மற்றும் தலித்துக்களுக்கு எதிராக கும்பல் படுகொலைகள் அரங்கேறின. இது ராஜஸ்தானில் முக்கியப் பிரச்சனையாக உருவெடுத்தது. ஆனால், முந்தைய பாஜக அரசு அதனைக் கண்டுகொள்ளவில்லை. மாறாக, கும்பல் படுகொலைகளுக்கு அரசு துணைபோகிறது என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளானது. சமீபகாலங்களில் ‘ஜெய் ஸ்ரீராம்’ கூறச்சொல்லி முஸ்லிம்களைத் தாக்கும் சம்பவங்களும் தலைதூக்கத் துவங்கின.

இந்நிலையில், ஆட்சிமாற்றம் ஏற்பட்டு, தற்போது காங்கிரஸ் அதிகாரத்திற்கு வந்துள்ள நிலையில், கும்பல் படுகொலைகளைத் தடுக்க சட்ட மசோதா ஒன்றை, ராஜஸ்தான் அரசு கொண்டு வந்துள்ளது. கும்பல் கொலைகளை, ஜாமீனில் வரமுடியாத குற்றவியல் நடவடிக்கையாக கருதவும், குற்றவாளிகளை வாரண்ட் இல்லாமல் கைது செய்யவும் இந்த மசோதாவகை செய்துள்ளது. கும்பல் படுகொலை குற்றத்துக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 5 லட்சம் வரை அபராதம் விதிக்கவும் சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.வெறுப்பு மற்றும் சகிப்பின்மை காரணமாகவே, கும்பல் படுகொலைகள் உள்ளிட்ட மோசமான குற்றங்கள் நடப்பதாகவும், தங்களின் இந்த மசோதாவால், அந்தகுற்றங்கள் தடுத்து நிறுத்தப்படும் என்று நம்புவதாகவும் ராஜஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.