மன்னார்குடி, ஏப்.6-
மதச்சார்ப்பற்ற முற்போக்குக் கூட் டணியின் தஞ்சை நாடாளுமன்ற வேட்பாளர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்தை ஆதரித்து மன்னார்குடியில் திரண்டிருந்த கூட்டத்தின் மத்தியில் வைகோ உரையாற்றினார். வெள்ளியன்று மாலை 6 மணி அளவில் மன்னார்குடி பெரியார் சிலை எதிரில் திறந்தவேனில் வைகோ பிரச்சாரம் செய்யும் போது தஞ்சை தொகுதி வேட்பாளர் எஸ்.எஸ். பழனிமாணிக்கமும் உடனிருந்தார். பிரச்சாரத்தின் போது மன்னார்குடிதொகுதி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா, திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் தலையாமங்கலம் ஜி.பாலு, திமுக மாநில சட்டத் திட்ட திருத்தக்குழு உறுப்பினர் பி.ராஜமாணிக்கம், வணிகர் அணி மாநில துணைச் செயலாளர் சு.ஞானசேகரன், மாணவர் அணி துணைச் செயலாளர் மன்னை சோழராஜன், ஒன்றியச் செயலாளர் க.தனராஜ், நகர செயலாளர் வீரா கணேசன், சிபிஎம் நகர செயலாளர் எஸ்.ஆறுமுகம், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கே.டி.கந்தசாமி, டி.பன்னீர்செல்வம், மதிமுக ஒன்றிய செயலாளர் பி.மாசிலாமணி, மாவட்ட பிரதிநிதி எம்.என்.பாரதிமோகன், காங்கிரஸ் தலைவர் எஸ்.எஸ்.செல்வராஜ், சிபிஐ விச செயலாளர் என்.மகேந்திரன். திராவிடர் கழக ஒன்றிய செயலாளர் மு.தமிழ்செல்வம், விசிக தலைவர்கள் ரமணி, இரா.செங்குட்டுவன் உள்ளிட்ட கூட்டணி தலைவர்கள் பிரச்சாரத்தில் உடனிருந்தனர்.