tamilnadu

img

அஞ்சாமல் நெஞ்சை நிமிர்த்தும் தொழிலாளி வர்க்கம்

அ.சவுந்தரராசன்  பெருமிதம் 

சென்னை,செப். 8- பொருளாதார வீழ்ச்சி காரணமாக பல நிறுவனங்களில்  ஊதியமில்லா லே ஆப் செய்யப்படுவதாக சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் கூறினார். சென்னையில் சனிக்கிழமை (செப்.7) நடைபெற்ற அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்க (சிஐடியு)சிறப்புப் பேரவைக்கூட்டத்தில் அவர்  பேசியதாவது:  பாஜக ஆட்சியில் சமூகவளை தளத்தில் பிரதமரைப்பற்றி பதிவுகள் போட்டதற்காக  போக்குவரத்து தொழிற்சங்கத் தலைவர்கள் பழிவாங்கப்படுகின்றனர். நெய்வேலி, ராணிப்பேட்டை போக்குவரத்து தொழிற்சங்கத்தலைவர்கள் அரசாங்கத்தை விமர்சித்ததால் தேசவிரோதி என்ற நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.  ஆட்சியாளர்கள் அவசரஅவசரமாக எடுக்கும் நடவடிக்கைகள் நிரபராதிகள் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது. காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்து, மாநிலத்தை இரண்டாக பிரித்து யூனியன் பிரதேசம் என அறிவிப்பது போன்ற  நடவடிக்கைகள் நம்மை நோக்கி வருகின்ற மிகமோசமான பாசிச சர்வாதிகார ஆட்சியின் அறிகுறி யாகும். அரசின் இந்த தாக்குதலை எதிர்த்து  அஞ்சாமல் நெஞ்சை நிமிர்த்துபவர்கள் தொழிலாளி வர்க்கம் மட்டுமே. ஆளும் வர்க்கத்தை யும் மூலதனத்தையும் எதிர்க்கும் வல்லமை தொழிலாளி வர்க்கத்திடம் தான் இருக்கிறது. அதனால் தான் ஆட்சியாளர்கள் தொழிலாளர்களிடம் மோதுகின்றனர். ஆட்சியாளர்கள் எந்த ஒரு ஆய்வும் நடத்தாமல்  தொழிலா ளர் நல சட்டத்தில் திருத்தம் கொண்டு வருகின்றனர்.

உற்பத்தி வளர்ச்சி இன்றி வீழ்ச்சியை நோக்கிச் செல்கிறது. இந்தி யாவில் பெரும்பாலான தொழிற் சாலைகளில் லேஆப் அறிவிக்கப்படு கிறது. மின்சாரத்தட்டுப்பாடு, கச்சாப்பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக லேஆப் விடப்படும். ஆனால் தற்போது பொருளாதார வீழ்ச்சி காரணமாக ஊதியம் இல்லா லேஆப் அறிவிக்கப்படுகிறது. ஆட்டோ மொபைல், மாருதி, டாட்டா,  அசோக்லேலண்டு, பவுண்டரி உள்ளிட்ட பலநிறுவனங்களில் லட்சக்கணக்கான தொழிலாளர்க ளுக்கு வேலை இழப்பு ஏற்பட்டு ள்ளது. உள்ளாடை வியாபாரம் , பிஸ்கட் வியாபாரம் நசிந்துவிட்டது. மதத்தையும் சாதியையும் வைத்து அரசியல் செய்வதே பாஜகவின் நோக்கமாக இருக்கிறது.எமர்ஜென்சியைப் போல் தற்போது ஆட்சியாளர்களின் அணுகுமுறை உள்ளது. எந்த கேள்வியும் வரைமுறையும் இன்றி கைது செய்யும் நிலைவந்துவிட்டது. அவசரநிலை காலத்தில் மிசா வாரண்ட் அறிவிக்கப்பட்டு  நான், தலைமறைவாக இருந்தபோது சவுந்த ரராசன் என  என் பெயரில் இருந்த திமுக தொழிலாளி ஒருவர் கைது செய்யப்பட்டு ஓராண்டுக்கு பின்னர் தான் விடுவிக்கப்பட்டார். நான் அவனில்லை என நிரூபிக்கும் வாய்ப்பை கூட அவசரக்காலச் சட்டம் அந்த தொழிலாளிக்கு  அனுமதிக்க வில்லை. தற்போதும் அதே நிலை ஏற்பட்டுள்ளது என்பதை மறுப்பதற்கு இல்லை. இந்த சர்வாதிகாரத்தை எதிர்த்து போராட தயாராக வேண்டும். இந்திய அரசியலில் எந்த  கட்சியும் சந்திக்காத தோல்வியை பாஜக சந்திக்கும்.  இவ்வாறு சவுந்தரராசன் பேசினார்.

அனைவருக்குமான கோரிக்கை 
 

தமிழ்நாடு அரசு போக்கு வரத்து ஊழியர் சம்மேளனம் பொதுச்செயலாளர் கே.ஆறுமுக நயினார் பேசுகையில், போக்கு வரத்து கழகத்திற்கு அரசு ஒதுக்கிய பணத்தை மாதம் தோறும் தவறாமல் கொடுத்து விடவேண்டும். போக்குவரத்து முதன்மைச் செயலாளர்,  சிஐடியு சங்கத்தை அழைத்து கோரிக்கை கொடுங்கள் என கேட்டு வாங்கும் அளவிற்கு நம்சங்கம் வலிமை பெற்றுள்ளது. நமது சங்கத்தின் கோரிக்கைகள் அனைவருக்குமான கோரிக்கையாக மாறியுள்ளது.  மோட்டார் வாகனசட்டத்திருத்தம் ஒட்டுமொத்த மோட்டார் வாகனத்தொழிலையும் அழிக்கும் நோக்கோடு கொண்டு வரப்பட்டுள்ளது. மோட்டார் வாகனத் தொழிலை கார்ப்பரேட் பெரு முதலாளிகளுக்கு தாரைவார்க்க  மாநில அரசு பர்மீட்டும், மத்திய அரசு லைசென்சும் கொடுக்கும் அவலநிலை உள்ளது என்றார்.

சிஐடியு மாநாட்டு நிதி 

பொதுச்செயலாளர் வி.தயானந்தன் தலைமையில் நடை பெற்ற இந்த பேரவைக்கூட்டத்தில் அகில இந்திய மாநாட்டு நிதியின் முதல்தவணை ரூ.2 லட்சத்து 16ஆயிரத்தை சிஐடியு மாநிலத்தலை வர் அ.சவுந்தரராசனிடம் பொரு ளாளர் ஏ.ஆர்.பாலாஜி வழங்கி னார். சங்க நிர்வாகிகள், பணிமனை நிர்வாகிகள் தங்கள் கோட்டாத்தொகையை கொடுத்தனர்.   சம்மேளனப்பொதுச்செயலாளர் கே.ஆறுமுக நயினார், சங்கத்து ணைத்தலைவர் எம்.சந்திரன், தலைவர் ஆர்.துரை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.