tamilnadu

img

நீட் தேர்வு ஆள்மாறாட்ட முறைகேடு கர்நாடகாவை சேர்ந்தவர் மூலம் நடந்துள்ளது

சிபிசிஐடி எஸ்.பி.தகவல்

தேனி, அக்.2-  கர்நாடகாவை சேர்ந்தவர் மூலம் நீட் தேர்வு ஆள்மாறாட்ட முறைகேடு நடந்துள்ளது என்று சிபிசிஐடி எஸ்.பி.தெரிவித்துள்ளார். நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் ஏற்கனவே சில மாணவர்கள் மற்றும் அவரது தந்தையர் கைது செய்யப் பட்டுள்ளனர். இதில் கைது செய்யப் பட்டுள்ள தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் முகமது இர்பானின் தந்தை முகமது சபி போலி மருத்துவர் என சிபிசிஐடி விசாரணையில் தெரிய வந்துள்ளது. முகமது சபியை புதன் கிழமையன்று காலை தேனி குற்ற வியல் நீதித் துறை நடுவர் நீதிமன்றத் தில் சிபிசிஐடி போலீசார் ஆஜர்படுத்தி னர். நீதிபதி பன்னீர்செல்வம் உத்தர வின் பேரில், அவர் 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் தேனி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.

முகமது சபியிடம் நடத்திய விசாரணையில், அவரது மகன் முகமது இர்பான் கடந்த 2018 ஆம் ஆண்டு மொரீசியஸ் நாட்டில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படித்து வருவதும், தற்போது அந்தக் கல்லூரியில் இருந்து விலகாமலேயே, நீட் தேர்வு எழுதுவதற்காக சான்றிதழ் களைப் பெற்று இங்கு வந்து ஆள்மாறா ட்டம் செய்து தேர்வு எழுதியிருப்பதும் தெரிய வந்துள்ளது. மேலும், முகமது இர்பானின் தந்தை முகமது சபி கடந்த 1990 ஆம் ஆண்டு, கர்நாடக மாநிலம், விஜய்பூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து ஓராண்டிலேயே படிப்பை நிறுத்தி யிருப்பதும், தற்போது உரிய கல்வித் தகுதியின்றி மருத்துவராக வேலை செய்து வருவதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று சிபிசிஐடி போலீசார் கூறினர். (விரிவான செய்தி :5)

நீட் தேர்வு ஆள்மாறாட்டப் புகார் குறித்து வேலூர் மாவட்டம்  திருப்பத்தூரைச் சேர்ந்த இடைத்தர கர் கோவிந்தராஜிடம் நடத்திய விசார ணையில், இந்த விவகாரத்தில் மேலும்  சில இடைத் தரகர்களுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அரசு ஆரம்ப சுகாதார நிலை யத்தில் மருந்தாளுநராக பணியாற்றி ஓய்வு பெற்ற வாணியம்பாடியைச் சேர்ந்த ஜெயராம் என்பவரிடம் இடைத் தரகர் வேதாச்சலம் குறித்து தான் தெரிவித்ததாகவும், வேதாச் சலத்தை முகமது சபி தொடர்பு கொண்டதாகவும் கோவிந்தராஜ் விசாரணையில் தெரிவித்துள்ளார். இடைத் தரகர் வேதாச்சலம் என்பவரும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய த்தில் மருந்தாளுநராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். மேலும், இந்த வழக்கில் தேடப்பட்டு வரும் இடைத்தகர் ரஷீத்  கர்நாடக மாநிலத்தில் வசித்து வருவ தாகவும், இவர் சென்னையில் குடியிருந்த போது வேதாச்சலத்துடன் தொடர்பு ஏற்பட்டதாகவும் கோவிந்த ராஜ் தெரிவித்ததாக சிபிசிஐடி போலீசார் கூறினர். இந்நிலையில், புதன்கிழமை மாலை கோவிந்தராஜை போலீசார் விடுவித்தனர்.

இரு வகையில் முறைகேடு

இது குறித்து சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் கூறுகையில், கர்நாடகாவை சேர்ந்த ரஷீத் என்பவர் மூலம் ஆள்மாறாட்ட முறைகேடு நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த முறை கேடு இரு முறைகளில் நடந்துள்ளது. நீட் தேர்வை வெவ்வேறு தேர்வு மைய ங்களில் சம்பந்தப்பட்ட மாணவரும், போலி நபரும் ஒரே நேரத்தில் எழுதி யுள்ளனர். சிலருக்கு போலி நபர் மூலம் மட்டும் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆண்டு மருத்துவக் கல்லூரிகளில் முதலாமாண்டு சேர்க்கை பெற்றுள்ள அனைத்து மாணவ, மாணவிகளின் சான்றிதழ் களையும் கல்லூரி நிர்வாகம் மூலம் சம்மந்தப்பட்ட மாணவர்கள் முன்னி லையிலேயே சரிபார்த்து அறிக்கை அளிக்குமாறு மருத்துவக் கல்வி இயக்குநரகத்தை கேட்டுள்ளோம் என்றார்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாணவர் முகமது இர்பானை காவ லில் எடுத்து விசாரிக்கவும், இடைத் தரகர்கள் குறித்த விசாரணையை சென்னை சிபிசிஐடி மூலம் மேற்கொ ள்ளவும் முடிவு செய்துள்ளதாக தேனி சிபிசிஐடி வட்டாரத்தில் கூறப்படு  கிறது. இதனிடையே, நீட் தேர்வில்  முறைகேட்டில் ஈடுபட்ட மாணவர் இர்பான் தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.