tamilnadu

img

தீபாவளி மது விற்பனைக்கு இலக்கு நிர்ணயிப்பதா?: இரா.முத்தரசன் கண்டனம்

சென்னை,அக்.21- மக்கள் நலனைப் பற்றி கவலைப்படாமல் தீபா வளி மது விற்பனைக்கு இலக்கு நிர்ணயிப்பதா? என்று தமிழக அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  கண்டனம் தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து  மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கடந்த சட்டமன்றத் தேர்தலில், அதிமுக வெளி யிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்திருந்தார். அவரது வழியில் ஆட்சி நடத்துவதாக கூறிவரும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு, அவரது கொள்கைகளுக்கு மாறாக படிப்படியாக மது விற்பனையை அதிகரித்து வருகின்றது. தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியோடு கொண்டாட முடியாத அளவிற்கு கடும் நெருக்கடி யில் மக்கள் உள்ளனர்.

இந்நிலையில், தீபாவ ளிக்கு ரூ.385 கோடிக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட வேண்டும் என்றும், பதினைந்து தினங்க ளுக்கு தேவையான மது வகைகளை மூன்றே நாட்க ளில் விற்பனை செய்ய முன் கூட்டியே இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும் என்றும், மிகச் சரி யான நேரத்தில் மதுபான கடைகள் திறக்க வேண்டும்  என்றும், எக்காரணத்தைக் கொண்டும் கடைகளை  கால தாமதமாக திறக்கக்கூடாது என்றும், டாஸ்மாக்  நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அக்டோபர் மாதம் 25 ஆம் தேதி ரூ. 80  கோடிக்கும் 26 ஆம் தேதியில் ரூ.130 கோடிக்கும், 27 ஆம் தேதி ரூ.175 கோடிக்கும் மதுவை விற்பனை  செய்ய டாஸ்மாக் நிர்வாகம் இலக்கு நிர்ண யித்துள்ளது. மக்கள் நலன் குறித்து சிறிதும் கவலைப்படா மல் மது விற்பனையை அதிகரித்து, மக்களை சீர ழிக்கும் தமிழ்நாடு அரசின் நிலைபாட் டினை இந்தி யக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கின்றது. டாஸ்மாக் கடை களில் பணிபுரியும் பணியாளர்கள் பண்டிகை நாளி லும் வேலை பார்க்க வேண்டும் என நிர்ப்பந் திப்பது கடும் கண்டனத்திற்குரியதாகும். இவ்வாறு முத்தரசன் கூறியுள்ளார்.