tamilnadu

img

ஊரக உள்ளாட்சி தேர்தல் : இன்று வாக்கு எண்ணிக்கை

வீடியோ  பதிவு செய்யப்படுகிறது

சென்னை,ஜன.1-  தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக் குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 10 மாவட்டங்களை தவிர்த்து மீதமுள்ள 27 மாவட்டங்களில் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்ட மாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடை பெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் ஜனவரி 2 வியாழனன்று எண்ணப்படுகின்றன.  வாக்குப்பெட்டிகள் வைக்கப் பட்டுள்ள 315 வாக்கு எண்ணும் மையங் களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாது காப்பு போடப்பட்டுள்ளது. 45 ஆயிரத்து 336 பதவி இடங்களுக்கான முதற்கட்ட தேர்தலில்  76.19 சதவீதம் வாக்குகள் பதி வானது. 46 ஆயிரத்து 639 பதவி இடங் களுக்கான இரண்டாம் கட்ட தேர்தலில் 77.73 சதவீதம் வாக்குகள்  பதிவாகின. புதுக்கோட்டை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, அரியலூர், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், பெரம் பலூர், திருவாரூர் ஆகிய 9 மாவட்டங் களில் உள்ள 30 வார்டுகளுக்கு  மறு வாக்குப்பதிவு நடந்தது. இதில் 72.70 சதவீத வாக்குகள் பதிவானது.

வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டு உள்ள அறை வியாழக்கிழமையன்று காலை 7 மணிக்கு வாக்கு எண்ணிக்கை கண்காணிப்பாளர்கள், தேர்தல் முக வர்கள் முன்னிலையில் சீல் உடைக்கப் பட்டு அறை திறக்கப்படுகிறது.   மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் மற்றும் பலர் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து, பெறப் பட்ட உத்தரவால், அனைத்து வாக்கு  எண்ணும் மையங்களிலும் நடக்கும் நிகழ்வுகள் வீடியோ பதிவு செய்யப்படு கிறது. குறிப்பாக ஒவ்வொரு அறை யிலும் 2 கேமிராக்கள் பொருத்தப்பட்டு வாக்கு எண்ணும் பணி பதிவு செய்யப் படுகிறது. வாக்கு எண்ணும் மையத்தில் நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும் ரகசிய மாக வீடியோ பதிவு செய்து பாதுகாக்கப் படும். இதில் பிரச்சனை ஏற்படும் பட்சத்தில் அந்த வீடியோ காட்சிகள் பார்க்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க ப்படும் என்று மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.