திருவள்ளூர், ஏப்.21 - திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியத் தில்லியில் 61 ஊராட்சிகளும், ஒரு பேரூராட்சி உள்ளது. இதில் 1 லட்சம் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். கொரொனா வைரஸ் தொற்று காரண மாக 144 தடை உத்தரவு உள்ள நிலையில் கும்மிடிப்பூண்டி பேரூராட்சி பஜார் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர், கவரப் பேட்டை 1, ஆரம்பாக்கம் 3 என்று கொரொனா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது.
இதில் கொரொனா வைரஸ் பாதிக்கப் பட்டுள்ள இடங்களில் தனிமைப்ப டுத்தி உள் ளார்களுக்கு தேவையான அனைத்து உதவி களையும் விஏஓ, வருவாய் ஆய்வாளர்கள், உதவியாளர்கள், பேரூராட்சியில் உள்ள துப்பு ரவு பணியாளர்கள் மற்றும் அலுவலக ஊழி யர்கள் உள்ளிட்ட அனைத்து அரசு ஊழியர்க ளும் உணவு அளிப்பது, தண்ணீர் கொண்டு செல்வது மற்ற பணிகளில் ஈடுபட்டு வரு கின்றனர். இந்தப் பணியில் ஈடுபட்டு வரும் அரசு ஊழியர்கள் அரசு வழங்கிய அடையாள அட்டைகளை அணிந்து கொண்டு இருசக்கர வாகனத்தில் கும்மிடிப் பூண்டி பஜார் வழியாக சென்று வருகின்றனர்.
அந்த ஊழியர்களை காவல்துறை அதிகா ரிகள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் ஊழி யர்களை வழி மறித்து தலைக்கவசம் அணிய வில்லை என 6 பேர் மீது வழக்குப் பதிவு செய் துள்ளனர். தொடர்ந்து கொண்டே இருக்கி றது. இதனால் கொரொனா பாதிப்பு பகுதி யில் உள்ள வீடுகளுக்கு அடிப்படை வசதிகள் செய்யமுடியாமல் அரசு ஊழியர்கள் தவித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து ஏப்-19 அன்று கும்மிடிப்பூண்டி பேருராட்சி ஊழி யர்கள், வருவாய் துறை ஊழியர்கள், ரேஷன் கடை விற்பனையாளர்கள் அனைவரும் தனித் தனியாக காவல்துறை அதிகாரிகள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று வட்டாட்சி யரிடம் புகார் மனு கொடுத்துள்ளனர். மேலும் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட் டத்திலும் ஈடுபட்டனர்.
இந்த தகவலை அறிந்த வட்டாட்சியர் குமார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அனைத்து அரசு ஊழியர்களிடமும் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இந்த பிரச்சனை சம்பந்த மாக மாவட்டம் ஆட்சியரிடம் கூறி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார் இதனையடுத்து போராட்டத்தை விலக்கிக் கொண்டனர்.