tamilnadu

img

குமரி மாவட்டத்தில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க மட்டுமே அனுமதி

குமரி மாவட்டத்தில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க மட்டுமே அனுமதி
    நாகர்கோவில், மார்ச்.27-
குமரி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் பொதுமக்கள் யாரும் வெளியே வர அனுமதிக்கப்படவில்லை. அத்தியாவசிய பொருட்கள் வாங்க மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.

அதுவும் காய்கறிகள், பலசரக்கு பொருட்கள், இறைச்சி, பால் உள்ளிட்ட பொருட்கள் வாங்க அனுமதிக்கப்படுகின்றனர். இவ்வாறு வாங்கும்போது நீண்ட இடைவெளிவிட்டு வரிசையில் நின்று பொதுமக்கள் வாங்கி செல்கின்றனர்.

இவ்வாறு அத்தியாவசிய பொருட்கள் வாங்க வெளியே வரும் பொதுமக்களுக்கு கொரோனா நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காவல் துறையினர் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை குமரி மாவட்டம் முழுவதும் நடத்தி வருகின்றனர் .

அந்த வகையில் குமரி மாவட்டம் அழகப்பபுரம் பகுதியில் உள்ள பொதுமக்கள் அதிகம் கூடும் சந்தையில் ஒலிபெருக்கி இணைத்த ஆட்டோவில் வந்த காவல் துறையினர் அங்கு கூடும் மக்களுக்கு கொரோனா நோய் பாதிப்பு குறித்தும், மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும் கோவிட் 19 தொற்று தொடர்பான எச்சரிக்கைகளை மீறி பலர் தேவையின்றி இரு சக்கர வாகனங்களில் வெளியே சுற்றி வருகின்றனர். வடசேரி உள்ளிட்ட பல இடங்களில் காவல் துறையினர், அந்த நபர்களை பிடித்து தோப்புக்கரணம் போட வைப்பது, இனிமேல் வெளியே வர மாட்டோம் என உறுதிமொழி கூறவைப்பது என தண்டனை வழங்கி வருகின்றனர்.
படம்  கே கே  தோப்புக்கரணம்