tamilnadu

img

அத்தியாவசிய பொருட்கள் பதுக்கல்: அமைச்சர் எச்சரிக்கை

திருவாரூர், ஏப்.17- கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக  ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ள தை தொடர்ந்து தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் நல வாரிய உறுப்பி னர்களுக்கு விலையில்லா நிவாரண பொருட்கள்  வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் அறிவித்திருந்தார்.

அதன்படி திருவாரூர் விளமல் பகுதியில் உள்ள  நியாய விலை கடையில் கட்டுமான தொழிலாளர் மற்றும் ஆட்டோ ஓட்டுனர் நல வாரிய உறுப்பி னர்களுக்கு விலையில்லா நிவாரணப் பொருட்  களை வழங்கி அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து அமைச்சர் காம ராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், “ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டதை தொடர்ந்து  அத்தியாவசிய பொருட்களை கூடுதல் விலைக்கு  விற்றாலோ அல்லது பதுக்களில் ஈடுபட்டாலோ அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும்” என்றார்.

விவசாய பணிகளில் ஈடுபடுவோருக்கு எவ்வித  பிரச்சனையும் கிடையாது அவர்களுடைய அங்கீ கார கடிதத்துடன் அவர்கள் பணிக்கு செல்லலாம்  என்றும் அமைச்சர் தெரிவித்தார்.