சென்னை, பிப். 3- விவசாயிகள் விளை விக்கும் பருப்பு வகைக ளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை அரசு உறுதிப்ப டுத்தினால் விவசாயிகள் தங்களது உற்பத்தியை ஆர்வத்துடன் மேற்கொள்ள உதவும் என்றும் இதனால் நாட்டில் உணவுத்தானிய உற்பத்தி மேலும் அதிக ரிக்கும் என்றும் இந்திய பருப்புகள் மற்றும் தானியங் கள் சங்கத்தின் சங்க தலை வர் ஜீது பேடா கூறியுள்ளார். சங்கத்தின் 5-வது சர்வ தேச பருப்பு வர்த்தக மாநாடு (தி பல்சஸ் கான்கிளேவ்) பிப்ரவரி 12 முதல் 14 வரை மகாராஷ்டிராவின் லோனா வாலாவில் உள்ள அம்பி வாலி நகரில் நடைபெற உள் ளது. இதையொட்டி சென் னையில் செய்தியாளர்களி டம் பேசிய அவர், “இந்தி யாவிலிருந்து 1000க்கும் மேற்பட்ட வர்த்தக பங்கு தாரர்கள் மற்றும் அமெ ரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, மியான்மர், எத்தி யோப்பியா, உகாண்டா, தான்சானியா, மொசாம்பிக், மலாவி போன்ற ஏற்றுமதி நாடுகளிலிருந்தும் பங்கேற் பாளர்கள் மாநாட்டில் பங் கேற்க உள்ளனர்” என்றார்.
ரசாயன கலப்பு இல்லாத இயற்கை உரங்களை கொண்டு பயறு மற்றும் பருப்பு வகைகளை விளை விப்பது விவசாயிகளிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ள தாக கூறினார். இந்த முறை யிலான சாகுபடிக்கு ஆதர வாக மத்திய மாநில அரசு கள் ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். மாநாட்டின் ஒரு பகுதி யாக உள்நாட்டு உற்பத்தி மற்றும் நுகர்வு அதிகரிப்பது பற்றி விவாதிப்பது மட்டு மல்லாமல், செயலாக்க திறனை மேம்படுத்துதல், நுகர்வை அதிகரித்தல் , ஏற்று மதி, மதிப்பு கூட்டல், புரோட் டீன் பிரித்தெடுத்தல், அறு வடைக்கு பிந்தைய பயிர் மேலாண்மை போன்ற வற்றைக் குறித்தும் நிபுணர்க ளுடன் விவசாயிகள் கலந்து ரையாட உள்ளதாக சங்கத் தின் துணைத் தலைவர் பிமல் கோத்தாரி கூறினார்.