காஞ்சிபுரம், ஜுன் 19- காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நடை பெறவுள்ள அத்திவரதர் திரு விழாவையொட்டி, தமிழக அரசு சார்பில் 29 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் திருவிழா, வருகிற ஜூலை ஒன்றாம் தேதி முதல் 48 நாட்கள் நடைபெற உள் ளது.
இதற்காக குளத்தின் அடியில் இருக்கும் அத்தி வரதரை எடுக்க, குளத்தில் உள்ள நீர் ராட்சஸ மோட்டார் மூலம் உறிஞ்சப்பட்டு, கோவில் உள் பிரகாரத்தில் உள்ள மற்றொரு குளத் தில் நிரப்பப்படுகிறது. அத னைத்தொடர்ந்து குளத்தில் உள்ள சேற்றினை அப்புறப் படுத்தும் பணி நடைபெறு கிறது. ஓரிரு தினங்களில் அனைத்து பணிகளும் நிறைவு பெறும் எனவும், ஜூலை ஒன்றாம் தேதி முதல் பொதுமக்கள் பார்வைக்கு அத்திவரதர் வைக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளிப் பார் என்றும் மாவட்ட நிர்வா கம் சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.