சென்னை,அக்.23- கலை, அறிவியல் படிப்புகளுக்கும் பொது நுழைவுத்தேர்வு கொண்டு வருவதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்டு மாநிலச் செயலாளர் முத்தரசன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “கல்வித்துறை பொது அதிகாரப் பட்டியலில் இருந்தாலும், மத்திய அரசு முழுமையாக தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளவும், ஏதேச் சதிகாரமான முடிவுகளை கல்வித்துறையில் திணிக்கிறது. ஏழை-எளிய பின்தங்கிய மற்றும் பட்டியல் இன மாணவர்கள் கலை அறிவியல் படிப்புகளில் பட்டம் பெறுவதைக் கூட இந்த பொது நுழைவுத் தேர்வு தடை செய்துவிடும். எதைக் கொடுத்தாலும் ‘சூத்திரர்களுக்கு’ கல்வியை கொடுக்கக்கூடாது என்னும் மனு தருமக் கோட்பாட்டை ‘புதிய கல்விக் கொள்கை’ வலியுறுத்துவதும், அதனை பாஜக அரசு செயல்படுத்த நினைப்பதும் ஏற்கனவே முடி யாத சமூக அநீதியாகும். இது கடும் கண்ட னத்துக்கு உரியது” என்று கூறியுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன்,“நாடு முழுவதும் அனைத்துக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை நுழைவுத்தேர்வு அறிமுகம் செய்யப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்கிரியால் அறிவித்துள் ளார். இது ஆர்.எஸ்.எஸ். கட்டுப்பாட்டில் செயல் படும் பாஜக அரசு, மனித சமூகத்தை பிளவு படுத்தும் ‘மனு தர்ம’ சிந்தனையின் நவீன வடிவ மாகும். இதன் மூலம் பெரும் பகுதி மக்களின் கல்வி உரிமையினை பறிக்க மத்திய அரசு முயற்சிக்கி றது” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.