இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தல்
மதுரை, செப்.29- நீட் தேர்வை நாடு முழுவதும் ரத்து செய்ய வேண்டும் என்று இந்திய மாண வர் சங்கம் மத்திய அரசை வலியுறுத்தி உள்ளது இந்திய மாணவர் சங்கத்தின் அகில இந்திய தொழில் கல்வி மாணவர்களுக் கான மாநாடு சனி, ஞாயிறு இருதினங் கள் மதுரையில் அகில இந்தியத் தலை வர் வி.பி.ஷானு தலைமையில் நடை பெற்றது. இதில் பங்கேற்றுள்ள அகில இந்தியப் பொதுச் செயலாளர் மயூக் பிஸ்வாஸ் ஞாயிறன்று செய்தியாளர் களைச் சந்தித்தார்: அப்போது அவர் கூறியதாவது:- நீட் தேர்வில் பல்வேறு மாநிலங்களில் முறைகேடுகள், ஆள் மாறாட்டங்கள் நடைபெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது அதிர்ச்சியளிப்பதாய் உள்ளது இந்தச் செயலில் நகர்புற மேல்தட்டுப் பிரி வினர் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக தமி ழகம், மேற்குவங்காளத்தில் நீட் தேர்வு வினாக்கள் மிகவும் கடின மான முறையில் தயார் செய்யப் பட்டிருந்தன. இந்த மாநில மாணவர் கள் பெருவாரியாக தோல்வி அடைந்த தற்கு இதுவும் ஒரு காரணம்
நீட் தேர்வு தொடங்கப்பட்ட காலத்தி லிருந்து இன்று வரை நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து முழுமையான, பாரபட்சமற்ற, சுதந்திரமான விசார ணையை மத்திய அரசு நடத்த வேண்டும். நீட் தேர்வு என்ற பெயரில் மருத்துவக் கல்வி, தொழில் கல்வி ஆகியவற்றை மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முயற்சிக்கிறது. இரண்டாவது முறையாக பொறுப் பேற்றுள்ள மோடி அரசு கல்வித் துறை யின் மீது கொடூரமான தாக்குதலை நடத்தி வருகின்றது. புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் அங்கன் வாடி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை மதவாதக் கருத்துகளை புகுத்த முயற்சிக்கிறது. குறிப்பாக வணிகமயம், வகுப்புவாதம், மையப்படுத்தப்பட்ட கல்வி என்ற மூன்று அம்சங்களை அவர்கள் முன்னிறுத்துகின்றனர். இது கூட்டாட்சித் தத்துவம், கல்வித்துறை யின் மீதும் நடத்தப்படும் தாக்குதலின் ஒரு பகுதியாகும். பாஜக ஆட்சியில் பெண்கள், தலித் மக்கள் மீது தாக்குதல் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. கல்வித் துறையில் விளிம்பு நிலையிலுள்ள தலித் மக்களை ஓரங்கட்டும் முயற்சி நடை பெறுகிறது. உதாரணத்திற்கு அகமதா பாத் ஐஐஎம்-மில் தலித் மாணவர் களுக்கான இட ஒதுக்கீடு மறுக்கப் பட்டுள்ளது
உயர்கல்வி தன்னாட்சி நிறுவனங் கள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தப் படுகிறது. தேசிய மருத்துவக் கவுன்சில் ஆணையம் தனியார் மருத்துவக் கல்வி நிறுவனங்களில் கட்டணத்தை கட்டுப் படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது என்று கூறப்பட்டாலும் அது மருத்துவக் கல்வி நிறுவனங்களில் சட்டவிரோத கட்டண கொள்ளையை கட்டுப்படுத்து வதில்லை. இதனால் தனியார் மருத்து வக் கல்லூரிகளில் பயிலும் மாண வர்கள் தற்கொலை செய்துகொள்வது அதிகரித்துள்ளது. சமீபத்தில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பகவத்கீதை பாடத் திட்டமாக்கப்பட்டுள்ளது. இது கல்வியை காவிமயமாக்கும் முயற்சி. பிரதமர் மோடி அறிவியல் மாநாடுகளில் பங்கேற்று அறிவியலுக்குப் புறம்பான விஷயங்களை பேசுவதோடு புராண கால கதாபாத்திரங்களை உயர்த்திப் பிடிக்கிறார். விநாயகருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி நடைபெற்றுள்ளது என அறி வியல் பூர்வமற்ற கருத்தை முன்வைத் துள்ளார்.
ஜவஹர்லால்நேரு பல்கலைக் கழகம் உள்ளிட்ட இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு உயர் கல்வி நிறுவனங் களில் நடைபெற்ற மாணவர் சங்க தேர்தலில் இந்திய மாணவர் சங்கம் பெரும் வெற்றி பெற்றுள்ளது. ஜவஹர் லால் நேரு பல்கலைக்கழகம் புதுச்சேரி பல்கலைக்கழகம் ஆகியவற்றில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது குஜராத் மத்திய பல் கலைக்கழகத்தில் மாணவர் சங்கம் கடும் போட்டியை சந்தித்தது. இருப்பின் 11 வாக்குகள் வித்தியாசத் தில் தோல்வியைத் தழுவியது. ஒரு தேசம், ஒரு மொழி, ஒரு மதம் என்ற கொள் கையின் மூலம் பன்முகத்தன்மையை அழிக்க முயற்சி நடைபெறுகிறது. சூரத் நகர் தேசிய தொழில்நுட்ப கல்லூரியில் ஆளும் பாஜக அரசு அதன் மாணவர் அமைப்பான ஏபிவிபியுடன் கூட்டுச் சேர்ந்து மாணவர்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறது. மகாராஷ் டிரம் ஹரியானா மாநிலங்களில் ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகள் மூடப்பட்டு விட்டன. இங்கு செயல்படுத்தப்பட்டு வந்த மதிய உணவுத் திட்டம் மூடப் பட்டு பாஜகவின் ஆதரவு அமைப்பான இஸ்கானிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ‘படிப்போம், போராடுவோம், முன்னேறு வோம்’ என்ற முழக்கங்களோடு இந்திய மாணவர் சங்கம் கல்வி உரிமைக் காகவும் மதச்சார்பின்மைக்காகவும் குரல் கொடுத்து வருகிறது. இந்தக் குரல் தொடர்ந்து ஒலிக்கும். மதச்சார்பற்ற இந்த தேசத்தை பாதுகாக்க, கல்வியில் மதவாத கருத்துக்கள் புகுவதைத் தடுக்க அனைத்து மாணவர்களும் இந்திய மாணவர் சங்க தலைமையின் கீழ் அணிதிரள வேண்டும். இவ்வாறு மயூக் பிஸ்வாஸ் கூறினார். பேட்டி யின் போது அகில இந்தியத்தலைவர் வி.பி.ஷானு, தமிழ்நாடு மாநிலச் செய லாளர் வி.மாரியப்பன், மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் வேல்தேவா ஆகியோர் உடனிருந்தனர். (ந.நி.)