சென்னை, மே 2- தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் ஏற்கெனவே 4 நாள் கள் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில், தஞ்சை, கடலூர், திருவாரூர், அரியலூர், நெல்லை ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரிப்பதை தடுக்கும் வகையில் மே மாசம் மூன்றாம் தேதி ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை என்பதால் மக்கள் அதிக மாக வெளியே வருவதை தடுக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர்கள் இந்த நடவடிக்கை எடுத்துள்ள னர். மருந்தகங்கள், பால் கடைகள் மற்றும் அம்மா உணவகங்கள் மட்டுமே இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.