tamilnadu

img

இன்று அகில இந்திய எதிர்ப்பு தினம் தமிழகம் முழுவதும் சிபிஎம் நடத்துகிறது

சென்னை, ஜுன் 15- கொரோனா நோய் தொற்று பரவல் தடுப்பு மற்றும் மக்கள் பாதுகாப்பு நட வடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகளின் தோல்வியை கண்டித்தும், மக்கள் எதிர் கொள்ளும் சொல்லொண்ணா துன்ப துய ரங்களை கருத்தில் கொண்டும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.7500 ரொக்கம், 10 கிலோ உணவு தானியம் விநியோகம், கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தில் 200 நாட்களுக்கு வேலை, பொது சுகாதாரம் - மருத்துவ பணிகளை பலப்படுத்துவது, வேலையின்மை - வேலையிழப்பு - வருமானம் இழப்பு,  விவசாயம் - சிறு,குறு, நடுத்தர தொழில்கள் மற்றும் மக்கள் வாழ்வாதார பாதுகாப்பு, புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பிரச்சனை உள்ளிட்டு தற்போதைய பிரதான அம்சங்களை முன்னிறுத்தி ஜூன் 16 அன்று  அகில இந்திய எதிர்ப்பு தின இயக்கத்தை பரவ லாக நடத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அரசியல் தலைமைக்குழு அறை கூவல் விடுத்துள்ளது. இதன் அடிப்படை யில், தமிழகத்தில் கொரோனா தொற்று  அதிகமுள்ள சென்னை, செங்கல்பட்டு, திரு வள்ளூர், காஞ்சிபுரம் தவிர்த்து இதர மாவட்ட ங்களில் இன்று (செவ்வாய்) ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.  ஒவ்வொரு மாவட்டத் திலும் நூற்றுக்கணக்கான மையங் களில் நடைபெற உள்ள இந்த  ஆர்ப்பாட்ட த்தின்போது முக கவசம், தனி நபர் இடை வெளி உள்ளிட்ட விதிமுறைகளை பின்பற்றி டவும் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.