சாத்தூர் அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்ற இளைஞர் உயிரிழந்தார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ளது ஏழாயிரம்பன்னை. இங்குள்ள தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் முத்துராம்(30). பொறியியல் படிப்பு முடித்துள்ளார். ஒட்டன்சத்திரத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். தொடர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த அவர் திங்களன்று இரவு ஏழாயிரம்பன்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைகாக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு உள் நோயாளியாக சேர்க்கப்பட்ட முத்துராமம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், முத்துராமனுக்கு கடந்த இரண்டு மாதங்களாகவே சளி தொந்தரவு இருந்து வந்துள்ளது. இதை கவனிக்காமல் விட்டுள்ளார். செவ்வாய்க்கிழமை முதல் தொடர் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. சாத்தூர் அரசு மருத்துமனைக்கு வரும்போதே மிகவும் மோசமான நிலையில் இருந்த அவர் மாரடைப்பால் உயிரிழந்தார் என்றனர்.