tamilnadu

img

அரசின் நீட் பயிற்சி மையத்தில் பண மோசடி

தலைமை ஆசிரியர் மீதான நடவடிக்கை  குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

மதுரை, நவ.5- நீட் பயிற்சி மையத்தில் பண மோசடி யில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர் மீது என்ன  நடவடிக்கை எடுக்கப்பட்டது என் பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பரசுராமன் என்பவர் உயர்நீதி மன்ற கிளையில் தாக்கல் செய்ய பொது நல வழக்கில், தமிழக அரசு பள்ளி கல்வித் துறை சார்பில் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு பயிற்சி அளிக் கும் வகையில்  நீட் பயிற்சி வகுப்பா னது தமிழகம் முழுவதும் 412 இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. அதில், 100 மையங்கள் தொடக்கம் முதல் செயல் பட்டு வருவதால் மீதமுள்ள 312 இடங்கள் நீட் பயிற்சி  மையம் அமைப்பது நடை பெற்றது. நீட் பயிற்சி  மையத்திற்கு என அரசு சார்பில் ஆசிரியர், கணினி பொருட் கள் என அனைத்து வசதிகளுக்கு பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடையநல்லூரில் உள்ள நீட் பயிற்சி மையத்தில் முதுகலை பட்டம் பெற்ற  7 ஆசிரியர்கள்  பணி அமர்த்தப்பட்டுவிட்டனர் என்று போலி தகவல் தயார் செய்து ஒப்படைத்து தலைமை ஆசிரியர் பண மோசடி செய் துள்ளார். அவ்வாறு, ஆசிரியர்கள் ஏதும் பணியமர்த்தப்படவில்லை. இது குறித்து, தகவல் உரிமை சட்டத்தின் மூலம் பெற்றும் முறையான சான்று இல்லை. பண மோசடி குறித்து மனு அளித்தும் தலைமை ஆசிரியர் மீது இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால்,  வறுமையில் பின்தங்கிய, நல்ல மதிப்பெண்கள் பெற்ற பல மாண வர்கள் நீட் தேர்வு தோல்வியினால் தவ றான முடிவுக்கு வருகின்றனர்.எனவே, பண மோசடியில் ஈடுபட்ட தலைமை ஆசி ரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பள்ளி கல்வித்துறை இணை இயக்குந ருக்கு உத்தரவிட வேண்டும் என்று தெரி வித்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி கள் சிவஞானம்,தாரணி அமர்வு முன்பு செவ்வாயன்று நடைபெற்றது. அப் போது நீட் பயிற்சி மையத்தில் நடந்த முறைகேடு குறித்து விசாரணை நடை பெற்று வருவதாகவும் இரண்டு வாரத் தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், நீட் பயிற்சி மையத்தில் பண மோசடியில் ஈடுபட்ட தலைமை ஆசிரி யர் மீது என்ன  நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது என்பது குறித்த அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண் டும் என்று உத்தரவிட்டனர்.