tamilnadu

img

எனக்கு மட்டும்!

சமீபத்தில் தமிழ்நாடு அரசு அரசு ஊழியர் & ஆசி ரியர்களுக்கான ஒப்படைப்பு விடுப்பு காசாக்கும் ஆணை ரத்து, அகவிலைப்படி உயர்வு ரத்து, புதிய பணி நியமன தடை, இளைஞர்கள் வேலைவாய்ப்பு பறிபோகும் வகையில் ஓய்வுபெறும் வயதை உயர்த்தியது உள் ளிட்டவற்றை கண்டித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தியது. அதில் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் பங்கேற்றனர்.

அந்தவகையில் நாகப்பட்டினத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றதற்காக ஒரு துறைவாரி சங் கத்தின் மாநிலத் தலைவர் இங்கு உள்ள நிர்வாகியை வறுத்து எடுத்துவிட்டார் “ நாமெல்லாம் அரசுக்கு எதிரான இயக்கங்களில் பங்கேற்கக் கூடாது என்பது தெரியாதா? மந்திரி என்னிடம் என்ன உங்க ஆட்களெல்லாம் ஆர்ப் பாட்டத்தில் கலந்து கொள்கின்றனர் என்று கேட்கிறார். மந்திரி எவ்வளவு நல்லவர் தெரியுமா ? நாம் சொன்னா ஒரு சிலருக்கு  காசே வாங்காம டிரான்ஸ்பர் போட்டு தரு கிறார். நீ இப்படியெல்லாம் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டால் நாளை நம்ம பேச்சு அரசாங்கத்திடம் எடு படுமா? இனிமே இதுமாதிரி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதாக இருந்தால், என்னை கேட்காம கலந்து கொள்ளக் கூடாது “ என்று பலவாறாக சத்தம்போட்டு விட்டு தொலைபேசி இணைப்பை துண்டித்து விட்டார்.

இந்த மாவட்ட நிர்வாகி “ ம்க்கூம், பீஸூ எங்க கட்டுறது. சரண்டருக்கு பீஸ் புடுங்குனது இவளுக்கு தெரியாது”  என மனதில் நினைத்துக் கொண்டே மாநிலத் தலைவருக்கு போன்செய்து “ தலைவரே வணக்கம். நீங்க அன்னைக்கு சத்தம் போட்டதிலேருந்து எனக்கு ரொம்ப அப்செட் ஆகிப் போச்சு. நானும் இனிமே இந்த அரசு ஊழியர் சங்கம் நடத்தும் போராட்டத்தில் நம்ம உறுப்பினர்களை பங்கேற்க வைப்பது சம்மந்தமா யோ சிச்சுக்கிட்டே இருக்கேன்...” என்று சொன்னதும் “ரொம்ப சந்தோஷம். நாம் அரசாங்கத்துக்கு அனுசரணையா நடந்தால்தான், நமக்கு வேண்டியத மந்திரி செஞ்சு குடுப்பாரு” என்றார்.

“சரிங்க தலைவரே! அப்புறம் ஒரே ஒரு ரிக் கொஸ்டு. வேறு ஒன்னுமில்ல, வருஷா வருஷம் ஜூன் மாசம் சரண்டர் வாங்கித்தான் என் மகனுக்கு ஸ்கூல் பீஸூ  கட்டுவேன். இப்பவேற என் பொண்டாட்டி அந்த பணத்தை வாங்குங்க பையனுக்கு பீஸ் கட்டணும்ன்னு சொல்றா. அதுனால தயவுசெய்து நீங்க மந்திரிகிட்ட பேசி எனக்கு மட்டும் கோச்சுக்காம சரண்டர் போட ஏற்பாடு பண்ணுங்க தலைவரே “ அப்புடின்னு கெஞ்சினார்.

தலைவரிடமிருந்து பதிலே வரவில்லை..

-அ.தி.அன்பழகன், நாகப்பட்டினம்