tamilnadu

கூடுதல் தண்ணீர் லாரிகள் : முதல்வர் ஆலோசனை

சென்னை,மே 29-தமிழகத்தில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொண்டு தீர்வு காண அதிகாரிகளுக்கு முத லமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தர விட்டுள்ளார்.கடந்த ஆண்டு பருவமழை எதிர்பார்த்த அளவிற்கு பெய்யாததன் காரணமாக தமிழகம் முழுவதும் நீர் நிலைகள் வறண்டுக்கிடக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் நிலவும் கடும் தண்ணீர் தட்டுப்பாட்டை சரி செய்வதுதொடர்பாக தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் துணை முதலமை ச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட அதி காரிகள் பங்கேற்றனர்.அப்போது தட்டுப்பாடுன்றி மக்களின்குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய போர்க்கால அடிப்படையில் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.தற்போது லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில், கூடுதல் லாரிகள் இயக்கவும், ஆழ்துளை கிணறுகள் அமைப்பது உள்ளிட்ட பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று கூறி குடிநீர் தேவைக் காக கூடுதல் நிதி ஒதுக்கியும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.தட்டுபாடின்றி தண்ணீர் கிடைக்க அதிகாரிகள், அமைச்சர்கள் இணைந்து பணியாற்றி மக்களின் நன்மதிப்பை பெற வேண்டும் எனவும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.