tamilnadu

img

கொரோனா தொற்று தடுப்புக்கு அடுத்தக்கட்ட நடவடிக்கை.... சட்டமன்றக் கட்சி தலைவர்களுடன் முதல்வர் ஆலோசனை......

சென்னை:
கொரோனா தொற்று தடுப்புக்கு அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்தும்ஊரடங்கு குறித்து முடிவு செய்யவும் அனைத்து சட்டமன்றக் கட்சி தலைவர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் மே 13வியாழனன்று ஆலோசனை நடத்தி னார். ஆட்சிப் பொறுப்பேற்றதும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை துரிதமாக செயல்பட்டு கொரோனா தடுப்புக்கும்சிகிச்சைக்கும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாவட்டம்தோறும் கண்காணிப்பதற்காக குழுக்களையும் உருவாக்கப் பட்டுள்ளது. அவர்கள் மாவட்ட அளவில் ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகின்றனர். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் வீதி வீதியாக காய்ச்சல் பரிசோதனை முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்துக்கட்சியினரும் பங்கேற்றனர். திமுக சார்பில் டி.ஆர். பாலு, ஆர்.எஸ். பாரதி, அதிமுக சார்பில் ஜெயக்குமார், வேடசந்தூர் பரமசிவம்,  காங்கிரஸ் சார்பில்விஜயதாரணி, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் நாகை மாலி, எம்.சின்னத்துரை, விசிக சார்பில் சிந்தனைச் செல்வன், பாலாஜி,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ராமச்சந்திரன், மாரிமுத்து,  மதிமுக சார்பில் சின்னப்பா, பூமிநாதன், மனிதநேய மக்கள் கட்சி ஜவாஹி ருல்லா, பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன், பாமக சார்பில் ஜி.கே.மணி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள்கொங்கு நாடு  கட்சி  ஈஸ்வரன், தமிழர்வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முரு
கன்  ஆகியோர் பங்கேற்றனர்.  

ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகை யில், “ரெம்டெசிவிர் மருந்தின் தேவைகருதி சென்னை மட்டுமின்றி மற்ற நகரங்களிலும் விற்பனை செய்யப்படுகிறது. கொரோனா தடுப்பில் தமிழகஅரசின் பணியில் வெளிப்படைத் தன்மை கடைப்பிடிக்கப்படுகிறது. வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை தடுக்க அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ.4 ஆயிரம் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. இரவு பகல் பாராமல் கொரோனா தடுப்பு பணிகளுக்குகட்டளை மையம் தொடங்கப் பட்டுள்ளது. ஒடிசா, மேற்குவங்காள த்தில் இருந்து ஆக்சிஜன் கொண்டுவர மத்திய அரசுக்கு அழுத்தம் தரப்பட்டு பலன் கிடைத்துள்ளது. சிங்கப்பூர், தைவான் நாடுகளில் இருந்து ஆக்சிஜன் கான்சன்ட்ரேட்டர்கள் வரவழைக்கப்படுகிறது. நோய்தொற்று அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு கூடுதல் படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. ஊரடங்கு கட்டுப்பாட்டை கவனத்தில் கொள்ளாமல் சிலர் வெளியே சுற்றி வருகின்றனர். வெளிநாடுகளில் இருந்து தடுப்பூசி இறக்குமதி செய்ய சர்வதேச ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. தனியார் மருத்துவ மனைகளில் கொரோனா சிகிச்சைக் கான கட்டணத்தை தமிழக அரசே ஏற்க அரசாணை வெளியிடப்படும்” என்று தெரிவித்தார்.