தமிழகத்தில் புதிய நெல் ரகம் கண்டுபிடிக்காததால் ஆந்திர மாநிலத்தையே நம்பி இருக்க வேண்டியுள்ளது இதை தவிர்க்க மாநில அரசு கூடுதலாக நிதி ஒதுக்கி நெல் ஆராய்ச்சி பணிகளை மேற்கொள்ளுமா? என்று திமுக உறுப்பினர் கே.என். நேரு எழுப்பிய துணைக் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் துரைக்கண்ணு,“தமிழ்நாட்டில் தற்போது 34 ரகம் புதியதாக கண்டுபிடித்துள்ளோம். ஆடுதுறை ஆராய்ச்சி நிலையத்தில் ஆய்வுப் பணிகள் நடந்து வருகிறது. இதில் எந்த தொய்வும் இல்லை” என்றார்.