tamilnadu

img

நீட் தேர்வு ஆள்மாறாட்டத்தில் மேலும் 3 மாணவர்கள் கைது

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பயின்றவர்கள்

சென்னை, செப்.28- மருத்துவப்படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு ஆள் மாறாட்ட விவகாரத்தில் மேலும் 2 மாணவர்கள், ஒரு மாணவி கைது செய்யப்பட் டுள்ளனர். நீட் தேர்வில் ஆள்மாறாட் டம் செய்து தேர்வு எழுதிய விவகாரம் தமிழகத்தில் மட்டு மல்லாது இந்தியா முழு வதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆள் மாறாட்ட வழக்கில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி யில் படித்த சென்னையைச் சேர்ந்த மாணவர் உதித் சூர்யா மற்றும் அவரது தந்தை டாக்டர் வெங்கடேசன் ஆகி யோர் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். முன்னதாக, அவர்களிடம் சிபி சிஐடி போலீசார் நடத்திய விசாரணையில், மேலும் சிலர் நீட் தேர்வு ஆள் மாறாட்டத் தில் ஈடுபட்டு மருத்துவக் கல் லூரிகளில் சேர்ந்திருப்பது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து சென்னையை சேர்ந்த 3 மாண வர்களிடம் சிபிசிஐடி போலீ சார் விசாரணை நடத்தினர். இதில் 3 பேரும் ஆள்மாறாட் டத்தில் ஈடுபட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து, அவர்களை சிபி சிஐடி போலீசார் கைது செய் துள்ளனர்.

பாலாஜி மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மாண வர் பிரவீன், அவரது தந்தை சரவணன், எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரியில் படித்து வரும் மாணவர் ராகுல், அவரது தந்தை டேவிஸ், சத்ய சாய் மருத்துவ கல் லூரி மாணவி அபிராமி, அவரது தந்தை மாதவன் ஆகிய 6 பேரும் கைது செய் யப்பட்டுள்ளனர். தனியார் மருத்துவக்கல் லூரிகளில் படித்து வந்த இவர் கள் அனைவரும் சென்னை யை சேர்ந்தவர்கள். விசார ணையின்போது, உத்தரப்பிர தேசத்திலும், தில்லியிலும் இவர்களுக்காக வேறு நபர் கள் நீட் தேர்வு எழுதியதை யும், இதற்காக லட்சக்கணக் கில் பணம் கைமாறியதையும் 3 மாணாக்கர்களும் ஒப்புக் கொண்டதாக கூறப்படு கிறது. சென்னையில் கைது செய்யப்பட்ட 6 பேரும் சனிக் கிழமையன்று அதிகாலை மதுரைக்கு அழைத்து வரப் பட்டனர். அங்கிருந்து, மாண வர் பிரவீன் மற்றும் அவரது தந்தை சரவணன், மாணவர் ராகுல் அவரது தந்தை டேவிஸ் ஆகிய 4 பேரும் தேனி சிபி சிஐடி அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்களிடம் தீவிர விசா ரணை நடைபெற்று வருகிறது. இதில் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர் முகமது இர்ஃபான் குறித்து கல்லூரிக்குச் சென்று சிபி சிஐடி போலீசார் விசாரித் துள்ளனர். அப்போது, அந்த மாணவன் கடந்த 6 ஆம் தேதி முதல் கல்லூரிக்கு வராதது தெரியவந்துள்ளது. தலைமறைவாகிவிட்டதாக கூறப்படும் முகமது இர் ஃபானை தேடி வருகின்ற னர்.