புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே மாங்கோட்டை ஊராட்சி அம்பேத்கர் தெருவைத் சேர்ந்தவர் கணேசன் மகன் லெட்சுமணன்(21). இவர், கறம்பக்குடி தீயணைப்பு நிலைய வீரராக பணிபுரிந்தார். இந்நி லையில் லெட்சுமணன் தனது வீட்டில் வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பணிச்சுமையினால் இறந்தாரா அல்லது வேறு பிரச்சனையா என ஆலங்குடி காவலர்கள் விசாரித்து வருகின்றனர்.