சென்னை, மார்ச் 6 - காவலர்கள் தாக்கிய தால், அவமானம் தாங்க முடி யாமல் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். சென்னை ராஜா அண்ணாமலை புரம் சேர்ந்தவர் சங்கரி. இவரது மகன் இ.ஹரிஷ் (வயது 24) சனிக்கிழமையன்று (மார்ச் 5) இரவு காமராஜர் சாலை யில் உள்ள ஒரு பிரியாணி கடையில் சாப்பிட்டுள்ளார். அப்போது அங்கு சிலர் தகராறில் ஈடுபட்டுள்ளர். அப்போது அங்கு வந்த அபிராமபுரம் காவலர்கள், ஹரிஷை காவல்நிலையம் கொண்டு சென்று தாக்கி யுள்ளனர். இதனை எதிர்த்து கேட்டதற்கு மேலும் பூட்ஸ்காலால் உதைத்து கடுமையாக தாக்கியுள்ளனர். இதனையறிந்து ஹரிசின் தாயார் சங்கரி காவல்நிலையம் சென்றுள்ளார். அவரையும் காவலர்கள் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. சங்கரி முன்னிலையிலேயே ஹரிஷை தாக்கியுள்ளனர். இதனால் அவமானத்தால் மனமுடைந்த ஹரிஷ், ‘‘காவலர்களிடத்தில் தவறு செய்யாத தன்னை தாக்கி அவமானப்படுத்தியுள்ளீர் கள். நான் தற்கொலை செய்து கொள்ளப் போகி றேன். என் மரணத்திற்கு நீங்கள்தான் காரணம்’’ என்று கூறிவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். காவலர்கள் தாக்கியதில் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்த ஹரிஷ், வீட்டிற்கு வந்ததும் விஷம் குடித்துள்ளார். இதனை சற்றும் எதிர்பார்க்காத சங்கரி, தனது மகனை ராயப்பேட்டை மருத்துவ மனையில் சேர்த்தார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக சங்கரி அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், உடற்கூராய்வை வீடியோ பதிவு செய்ய வேண்டும். வருவாய் கோட்டாட்சியர் விசாணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அந்த புகாரில் தெரிவித்துள்ளார். நீதிவிசாரணை இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மயிலாப்பூர் பகுதிச் செய லாளர் ஆர்.ரவி விடுத்துள்ள அறிக்கையில், காவல்துறை தாக்குதல் காரணமாக மன உளைச்சல் அடைந்து ஹரிஷ் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த மரணத்திற்கு காரணமான இ-4 அபிராமபுரம் காவல்நிலைய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்கொலைக்க தூண்டிய காவலர்கள் மீது ஐபிசி 309வது பிரிவின் கீழ் வழக்கு பதிய வேண்டும். நீதிபதி தலை மையில் விசாரணை நடத்த வேண்டும். ஹரிஷ் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்” என்று வலியுறுத்தி உள்ளார்.