பொன்னமராவதி, ஆக.12- புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகா வார்பட்டு வட்டம் வேந்தன்பட்டி விஏஓ அலுவலகத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடை பெற்றது. வட்டாட்சியர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். காவல் ஆய்வாளர் கருணாகரன், வார்பட்டு ஊராட்சி முன்னாள் தலைவரும், கூட்டுறவு சங்கத் தலைவருமான மலைச்சாமி முன்னிலை வகித்த னர். வேந்தன்பட்டி முன்னாள் ஊராட்சி தலைவர் விஜயகுமார், மேலைச்சிவ புரி கண்ணன், வருவாய் ஆய்வாளர் ஜோதி உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர். கிராம நிர்வாக அலுவலர் ஆரோக்கியராஜ் நன்றி கூறினார். விஏஓ அலுவலகத்தில் சுற்றுச் சுவர் கட்டப்பட்டு அதன் நினைவாக மா, பலா, வாழை, தென்னை உள்ளிட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.